குரு லக்ஷணங்கள் சிஷ்யனுக்கும் ஏற்படும்

குரு லட்சணங்கள் சிஷ்யனுக்கும் ஏற்படும்

க-காரம் ஸித்தி ப்ரதம் என்பதால் குரு மோட்ச பர்யந்தம் பலவிதமான ஸித்திகளை அளிப்பவரென்றாகிறது. ஸித்தி என்றால் மாயா மந்த்ர சித்து இல்லை, ஸரியாகச் சொன்னால் அது மட்டுந்தான் என்றில்லை, ஏனென்றால் இந்த அணிமாதி ஸித்திகளையும் (சித்துக்களையும்) ஒரு குரு கற்றுக் கொடுத்தாலும் கொடுக்கலாம். ஆனால் 'ஸித்தி' என்றால் பொது அர்த்தம் எந்த ஒரு லட்சியத்தையும் அடைந்துவிட்ட நிலை என்பதே. குரு, ஸர்வ ஸித்தி ப்ரதர் - அதாவது எல்லாவித வாழ்க்கை லட்சியங்களையும சிஷ்யன் அடையுமாறு செய்பவர் என்றே ககாரம் காட்டுகிறது. ர என்பது, ர-காரம் என்காமல் ரேபம் என்கவேண்டியது, பாப ஹாரகம் என்றதால் சிஷ்யனுடைய பாபத்தை குரு போக்கி அவனை சுத்தனாக்குபவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த இரண்டு எழுத்துடனும் சேரும் உ-காரம் விஷ்ணு. அதுவே அவ்யக்தம் என்பதால் குருவின் என்ன லக்ஷணம் தெரிவிக்கப்படுகிறது? விஷ்ணு சப்தம் ஸர்வ வ்யாபகத்தைக் குறிப்பதால் குரு ஸர்வவ்யாபி என்றாகிறது. ஸர்வம், வியாபிப்பது என்பதால், அது த்வைத லோகத்தைக் குறித்த விஷயமாகிறது. கருணையினாலே குருவின் அநுக்ரஹ சக்திலோகம் முழுவதையும் all-embracing ஆக வ்யாபித்திருப்பதை இது (விஷ்ணு சப்தம் அவருக்குப் பொருத்தப்படுவது) hint பண்ணுகிறது.

குரு ஏதோ ஒன்றாக இருக்கிறாரென்றால் சிஷ்யனையும் அந்தப்படியே ஆக்கிவிடுவார் என்று அர்த்தம். ஸித்தி தருவது, பாபத்தைப் போக்குவது ஆகிய கார்யங்களை சிஷ்யன் விஷயமாகச் செய்யும் அவர் சிஷ்யனக்கும் all-embracing அநுக்ரஹ சக்தி, உபதேச சக்தி தந்து தம் மாதிரியே குருவாக்குகிறார் என்று இங்கே நீட்டி அர்த்தம் பண்ணிக் கொள்ளணும்.

அப்புறம் அவ்யக்த ப்ரஹ்மமாக அவரைச் சொன்னதையும் இதேபோல, சிஷ்யனுக்கும் அந்த நிலையைத் தந்து ப்ரஹ்மாநுபூதியில் இருக்கச் செய்கிறவரென்று அர்த்தம் பண்ணிக்கணும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அத்யக்ஷகர்;அத்யாபகர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  'ஆசார்ய'பதச் சிறப்பு
Next