சீடனைத் தம் நிலைக்கே உயர்த்தும் குரு

சீடனைத் தம் நிலைக்கே உயர்த்தும் குரு

மணியின் உள்ளே ப்ரதிபிம்பம்தான், மூலபிம்பமே இல்லை என்று இங்கே முடிந்துவிடுகிறது. உத்தம குரு - உத்தம சிஷ்யர்களைப் பார்த்தாலோ அதற்கும் மேலே ஒரு படி - மணியே அந்த பிம்பமாக மாறி விட்டால் எப்படியிருக்கும்? அப்படி சிஷ்யனே ஸாக்ஷ£த் அந்த குருவுடன் ஸர்வ ஸாம்யம் - identity - அடைந்து விடுவான் இந்த குரு இந்த சிஷ்யனை இப்படி குருவாகவே உயர்த்திய மாதிரி இவனும் எதிர்காலத்தில் தனக்கு சிஷ்யனாக வருபவனை ஆக்கிவிடுவான்.

ஸ¨ர்யனையும் ஸ்படிக மணியையும் வைத்து நாம் இப்போது பார்த்ததையே ஸ்பர்ச மணியையும் லோஹத்தையும் (உலோகத்தையும்) வைத்து நம்முடைய ஆசார்யாள் உவமை கொடுத்துச் சொல்லியிருக்கிறார்.

த்ருஷ்டாந்தோ நைவ த்ருஷ்ட - ஸ்த்ரிபுவந - ஜடரே ஸத்குரோர் - ஜ்ஞாநதாது:

ஸ்பர்சச்சேத் - தத்ர கல்ப்ய:ஸ நயதி யதஹோ ஸ்வர்ணதாம் அச்மஸாரம் 1

ந ஸ்பர்சம் ததா (அ) H ச்ரித - சரண - யுகே ஸத்குரு ஸ்வீய - சிஷ்யே

ஸ்வீயம் ஸாம்யம் விதத்தே நிருபம - ஸ்தேந வா (அ) லெனகிகோ (அ) H

உவமையையே 'த்ருஷ்டாந்தம் காட்டுவது' என்றும் சொல்வது அலங்கார சாஸ்திரத்தில் இரண்டுக்கும் வித்யாஸம் உண்டானாலும், நடைமுறை இப்படித்தான். 'ஆசார்யாள் குருவுக்குச் சொல்கிற உவமை' என்று ஆரம்பித்தேன். ஆனால் அவரோ ச்லோக ஆரம்பத்திலேயே, 'குருவுக்கு த்ருஷ்டாந்தமே நம்முடைய த்ருஷ்டியில் அகப்படாது, மூவுலகங்களுக்கும் உள்ளேயே புகுந்து பார்த்தாலும் அகப்படாது' என்கிறார்!முடிக்கிறபோதும் 'நிருபம' - 'உவமையற்றது' - என்று சொல்கிறார். ஏன், உபமான வஸ்து எதுவானாலும் மூவுலகிலிருந்துதான் கிடைத்தாகவேண்டும். ஆனால் குரு ஸமாசாரமோ உலகுக்கெல்லாம் அப்பாற்பட்டது, அது 'அ-லௌகிக'மானது என்கிறார்!

ஸாதாரணமாக குரு ப்ரசம்ஸையாக (புகழ்துதியாக) ஒரு த்ருஷ்டாந்தம் சொல்வதுண்டு. ஸ்பர்சமணி என்று ஒரு அபூர்வ மணியின் ஸ்பர்சம் படும்படியாக எந்த லோஹத்தை - இரும்பையேகூட - வைத்தாலும் அந்த ஸ்பரிச விசேஷத்தால் இரும்பு உள்பட எந்த லோஹமானாலும் அது ஸ்வர்ணமாகிவிடும். அப்படித்தான், இரும்பு மாதிரித் தமஸ் - அஞ்ஞான இருள் - மூடியுள்ள சிஷ்யனும் குரு ஸங்கத்தால் புடம் போட்ட ஸ்வர்ணமாக மாறி ஞானத்தில் ப்ரகாசிக்கிறார் என்று சொல்வண்டு. ஆனாலும் எந்த விஷயமானாலும் ஆழமாக ஊடுருவிப் பார்க்கிற ஆசார்யாளோ, அந்த த்ருஷ்டாந்தமும் போதவே போதாது, அது ஸரியே இல்லை என்கிறார் ஏன்? இரும்புக்கு ஸ்வர்ணமாகிற தன்மையை ஸ்பர்சமணி தருவது வாஸ்தவந்தான். 'அச்ம ஸாரம் ஸ்வர்ணதாம் நயதி' என்று இரண்டாம் பாதத்தில் வருவதற்கு, 'இரும்புக்கும் ஸ்வர்ணத்தன்மையை அடைவிக்கிறது' என்று அர்த்தம். 'அச்மஸாரம்' என்றால் இரும்பு. 'அச்மம்' என்றால் கல். மரத்தின் ஸாரமாக வஜ்ரம் உண்டாகிறது போல, கல்லின் ஸாரமாக இரும்பு உண்டாவதாகச் சொல்வது கவி மரபு. ஸ்பர்சமணியின் ஸம்பந்தத்தால் இந்த அச்மஸாரமும் ஸ்வர்ணமாகிறது. இது

வாஸ்தவம். ஆனால் ஸ்வர்ணத் தன்மையைத்தான் அந்த ஸ்பர்சமணி தருகிறது. 'ந ஸ்பர்சத்வம்' - அந்த இரும்பும் தன்னைப் போன்ற இன்னொரு ஸ்பர்ச மணியாக ஆகி, வேறே இரும்பு வஸ்துக்களை ஸ்வர்ணமாக்கும்படி இந்த ஸ்பர்சம் ரூபமாற்றம் பண்ணுவதில்லை.

ஆனால், குரு? ஸத்குரு?

'ஸத்குரு ஸ்வீய சிஷ்யே ஸ்வீயம் ஸாம்யம் விதத்தே'

ஸத்குருவானாவர் தன்னுடைய சிஷ்யனுக்கோ... 'தனதே தன்னுடையவனாக அத்தனை அத்யந்தமாக இருக்கிற சிஷ்யன்' என்று குரு - சிஷ்யாளின் ப்ரேம பாந்தவ்யத்தைக் காட்டச் சின்னதாக 'ஸ்வீய சிஷ்யே' என்று போட்டிருக்கிறார். 'ஸ்வீய' என்றால் 'தனக்கே தனக்கான'. 'one's own' என்கிறார்களே, அது!அப்படிப்பட்ட சிஷ்யனுக்கு ஸத்குரு 'ஸ்வீயம் ஸாம்யம் விதத்தே' 'தனக்கே முற்றிலும் ஸமதையாகிவிடும் தன்மையைக் கொடுத்துவிடுகிறார்'! குரு சிஷ்யனையும் தன்னுடைய பூர்ண நிலைக்கே transform பண்ணிவிடுகிறார். "சிவமாக்கி எனையாண்ட" என்று மாணிக்கவாசக ஸ்வாமிகள் சொன்ன மாதிரி!

இது பொதுவாக ரொம்பவும் உத்தமமான பாத்திரத்தின் விஷயத்திலேயே நடப்பது. எங்கேயாவது ஒரு மாறுதலாகத்தான், 'க்ருபா சக்திக்கு எல்லையே கிடையாது, அதனால் எதுவும் பண்ண முடியும்' என்று காட்டுவதற்காகப் பரம அபாத்திரன் ஒருவனையும் - இரும்பு மாதிரியான சிஷ்யனையும் - ஒரு குரு ஆட்கொண்டு உச்சத்திற்குத் தூக்கிவிட்டு ஸ்பர்சமாக்குவது.

பொதுவாக, அவரும் குரு லக்ஷணங்களுடன் இருந்து, இவனும் சிஷ்ய லக்ஷணங்களுடன் இருந்து, அவரும் மனப் பூர்வமாகப் சொல்லிக் கொடுத்து, இவனும் மனப் பூர்வமாகக் கற்றுக்கொண்டு, அவர் காட்டுகிற வழியில் போகத் தன்னாலான ஸ்வய ப்ரயத்னம் அத்தனையும் பண்ணி, அவரும் அதைத் தூண்டிக் கொடுத்து, அப்புறம் தம்முடைய அநுபவத்தையே அவனுக்குள் க்ருபா சக்தியால் இறக்கி அவன் லக்ஷ்ய ஸித்தி அடைவதாகத்தான் நடக்கிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is சீடன் முயற்சியும், குருவின் அருளும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  சீடனின் யோக்யதையும் குருவின் கருணையும்
Next