ஹிந்து மதத்தின் ஆதாரப் புஸ்தகங்களில், வேதத்துக்கு அடுத்தபடியாக வருவது வேதத்தின் ஆறு அங்கங்கள்.
வேதத்தை ஒரு மூர்த்தியாகச் சொல்லும் போது அந்த வேத புருஷனுக்குப் பல அங்கங்கள் இருக்கின்றன. வாய், மூக்கு, கண், காது, கை, பாதம், என்ற ஆறு அங்கங்கள் இருக்கின்றன. இவற்றை “ஷட் (ஆறு) அங்கம்”, “ஷடங்கம்” என்று சொல்லுவார்கள். சடங்கு என்று சொல்லுவது அந்த வார்த்தையிலிருந்து மருவி வந்ததுதான்.
“வேதமோ(டு) ஆறு அங்கம் ஆயினான்” என்று தேவாரம் சொல்லும் ஆறு அங்கம் ஷடங்கமே.