காசும் கறையுடை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாம் பத்து

காசும் கறையுடை

பகவந் நாமங்களைச் சொல்ல நேரம் இல்லையா!அப்படியானால் ஒன்று செய்யுங்கள்!உங்கள் குழந்தைகளுக்குப் பகவானின் செயரை இடுங்கள். அவர்களை நீங்கள் அழைக்கும்போது, பகவான் தன்னையே அழைப்பதாக நினைக்கிறான். பெயரிட்ட தாய் தந்தையர்களும், பெயர் தாங்கிய குழந்தைகளும் நம்மை பெறுவார்கள் என்கிறது இத்திருமொழி.

மக்களுக்கு பகவானுடைய திருநாமங்களை இட்டழைக்குமாறு அறிவுரை கூறல்

கலிநிலைத்துறை

மகனுக்கு கேசவன் என்றே பெயரிடுக

381. காகம் கறையுடைக் கூறைக்கு மங்கோர் கற்றைக்கும்

ஆசையினால் அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்,

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ,

நாயகன் நாரணன் தம்மன் னைநர கம்புகாள். 1

மகனை 'சிரீதரா!'என்றழை

382. அங்கொரு கூறை யரைக்கு டுப்பத னாசையால்,

மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்,

செங்க ணெடுமால் சிரீதரா வென்ற ழைத்தக் கால்,

நங்கைகாள்! நாரணன் தம்மன் னைநர கம்பு காள். 2

பிச்சை புக்காகிலும் எம்பெருமான் திருநாமத்தையே இடு

383. உச்சியி லெண்ணெயும் சுட்டியும் வளையு முகந்து,

எச்சம் பொலிந்தீர்கா ளென்செய் வான்பிறர் பேரிட்டீர்

பிச்சைபுக் காகிலு மெம்பி ரான்திரு நாமமே

நச்சுமின், நாரணன் தம்மன் னைநர கம்புகாள். 3

மகனை 'மாதவா, கோவிந்தா'என்றழை

384. மானிட சாதியில் தோன்றிற்றோர் மானிட சாதியை,

மானிட சாதியின் பேரிட் டால்மறு மைக்கில்லை

வானுடை மாதவா கோவிந் தாவென் றழைத்தக் கால்,

நானுடை நாரணன் தம்மன் னைநர கம்புகாள். 4

கோவிந்தன் என்று பெயரிட்டால் நரகமில்லை

385. மலமுடை யூத்தையில் தோன்றிற் றோர்மல வூத் தையை,

மலமுடை யூத்தையின் பேரிட் டால்மறு மைக் கில்லை,

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா வென்ற ழைத்தக்கால்,

நலமுடை நாரணன் தம்மன் னைநர கம்புகாள். 5

தாமோதரா என்று சொல்ல விரும்பு

386. நாடு நகரு மறிய மானிடப் பேரிட்டு,

கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே,

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோ தராவென்று

நாடுமின்,நாரணன் தம்மன் னைநர கம்புகாள். 6

கருமுகில் வண்ணன் பெயரையே விரும்பு

387. மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு, அங்கு

எண்மொன் றின்றி யிருக்கு மேழை மனிசர்காள்,

கண்ணுக் கினிய கருமுகில் வண்ணன் நாமமே

நண்ணுமின், நாரணன் தம்மன் னைநர கம்புகாள்.

தாமரைக்கண்ணன் என்று பெயரிடுக

388. நம்பி பிம்பியென்று நாட்டு மானிடப் பேரிட்டால்,

நம்பும் பிம்புமெல் லாம்நாலு நாளி லுழுங்கிப்போம்,

செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட் டழைத்தக்கால்,

நம்பிகாள்!நாரணன் தம்மன் னைநர கம்புகாள். 8

முகில்வண்ணன் பெயரை இடுக

389. ஊத்தைக் குழியி லமுதம் பாய்வது போல், உங்கள்

மூத்திரப் பிள்ளையை என்முகில் வண்ணன் பேரிட்டு,

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ,

நாத்தகு நாரணன் தம்மன் னைநர கம்புகாள். 9

வைகுந்தத்தில் என்றும் இருப்பர்

390. சீரணி மால்திரு நாம மேயிடத் தேற்றிய,

வீரணி தொல்புகழ் விட்டு சித்தன் விரித்த,

ஓரணி யண்டமி ழொன்பதோ டொன்றும் வல்லவர்,

பேரணி வைகுந்தத் தென்றும் பேணி யிருப்பரே. 10

(பகவானின் பெயரை அனைவரும் தம் குழந்தைகளுக்கு வைப்பதும், பெயரைக் குறைக்காமல் முழுப் பெயரோடு அழைப்பதும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் நலம்.)

அடிவரவு:காசும் அங்கொரு உச்சி மானிடம் மலம் நாடு மண் நம்பி ஊத்தை சீரணி - தங்கையை.


 



 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is ஆசைவாய்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தங்கையை மூக்கும்
Next