குரு, ஆசார்யர், தேசிகர் என்று மூன்று வார்த்தை இருப்பதில் குரு என்றால் பெரியவர் என்று ஒரு அர்த்தமும் இருட்டை (அஞ்ஞான இருட்டை) ப் போக்குகிறவர் என்று ஒரு அர்த்தமும் இருக்கின்றன. ஆசார்யர் என்றால் ஆசாரம் என்பதாக ஒரு ஸம்ப்ரதாயத்தில் தொடர் வழக்கில் வந்துள்ள உயர்ந்த வழிகளைத் தானும் பின்பற்றி, சிஷ்யனையும் பின்பற்ற வைக்கிறவர் என்று அர்த்தம். இந்த இரண்டிலுமே அவர் செய்கிற முக்யமான கார்யமான உபதேசம் என்பதைக் காட்ட ஒன்றுமில்லை. தேசிகர்* என்ற வார்த்தைதான் அதைக் காட்டுவதாக இருக்கிறது. பெரியவர், அஞ்ஞான இருட்டைப் போக்குகிறார், உசந்த வழிகளைப் பின்பற்றுகிறார் என்பதெல்லாமே சின்னவர்களாக இருக்கிற சிஷ்யர்களிடமிருந்து அவர்களை ரொம்பவும் வேறுபடுத்தி எட்ட நிறுத்தி விடுகின்றன. ஒரு தேசத்தில் guide என்பவன் கூடக் கூட வந்து எந்த இடத்தில் என்ன அழகு இருக்கிறது என்று காட்டுகிறது போல, என்ன ஆபத்து இருக்கிறது என்றும் சொல்லி நல்ல வழியாகவே அழைத்துப் போவது போல, தேசிகர் என்னும் போதுதான் நம்மோடு ஒட்டியிருந்து கூடவே வழிகாட்டியாக வந்து நாம் இஹ லோக ஆபத்தில் மாட்டிக் கொள்ளாமல் ரக்ஷித்து, ஆத்ம லோகத்திலுள்ள அழகுகளை அநுபவிக்கும்படியாக உபதேசம் பண்ணுகிறவரின் ப்ரேம பாந்தவ்யத்தைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
* “தெய்வத்தின் குரல்” மூன்றாம் பகுதியில் ‘