1. ஸ்ரீ கிருஷ்ணன் தட்சிணாயனத்தில் கிருஷ்ண பட்சம் அஷ்டமியில்
பிறந்தார். ஸ்ரீ ராமபிரான் உத்தராயணத்தின் சுக்லபட்சம் நவமியில் பிறந்தார். இது
அவதாரத்தில் வேற்றமை.
2. நீலமேக சியாமளன் ஸ்ரீ கிருஷ்ணன் திருவுருவம். பச்சைமா மலைபோல்
திருமேனி ஸ்ரீராமபிரான். இது திருஉருவத்தில் வேற்றுமை.
3. ஸ்ரீ கண்ணனுக்குப் பிறந்த இடம் ஒன்று வளர்ந்த இடம் ஒன்று. ஸ்ரீ
ராமபிரானுக்குப் பிறந்த இடம், வளர்ந்த இடம் இரண்டும் ஒன்று. இது வளர்ப்பில்
வேற்றுமை.
4. ஸ்ரீ கண்ணபிரான் சகோதரரோடு இருவர். ஸ்ரீராமபிரான் சகோதரர்களுடன்
நால்வர். உடன் பிறப்பில் வேற்றுமை.
5. லட்சமணன் ராமன் ஒருபொழுதும் பிரிந்து போக மாட்டான். ராமனுக்காகத்
தன் உயிரையும் தியாகம் செய்வான். கண்ணனுக்காகப் பலராமன் சிறுவயதில்
ஒன்றாக அவதாரமே தவிர, பிறகு முக்கியமான வேளைகளில் எல்லாம் தனியாகப்
போய்விட்டார். இது வேற்றுமை.
6. ஸ்ரீ ராமபிரானுக்கு ஒரு மனைவி. ஸ்ரீ கிருஷ்ணன் ருக்மிணி
சத்யபாமாவுடன் கூடியவர்.
7. ஸ்ரீ ராமபிரான் தன் காலினால் அகல்யைக்குச் சாப விமோசனம்
அளித்தார். ஸ்ரீ கண்ணபிரான் கம்ஸனுக்குச் சந்தனக் குழம்பு எடுத்துச் சென்ற
கூனியைத் தன் கை ஸ்பரிஸத்தினால் குமரி ஆக்கினார்.
8. ஸ்ரீ ராமபிரான் தன் அஸ்திரத்தினால் எல்லா அசுரர்களையும் மாய்த்தார்.
ஸ்ரீ கண்ணபிரான் ஜராஸந்தனிடத்திலும் குருஷேத்ர யுத்தத்திலும் ஆயுதம்
எடுக்காமல் மாய்த்தார்.
9. ஸ்ரீ ராமபிரான் 14 ஆண்டு காட்டிற்குச் சென்று பலவித சிரமங்களை
அனுபவித்தார். ஸ்ரீ கண்ணபிரான் காட்டிற்குச் சென்ற பஞ்சபாண்டவர்களுக்கு 13
வரஷம் அனுக்ரஹம் செய்தார்.
10. சபரி பக்தியோடு கொடுத்த பழங்களை உண்டார் ஸ்ரீராமபிரான்.
ஆண்பக்தர் குசேலர் பக்தியோடு கொண்டுவந்த அவலை நினைவுறத்தி, தானே
பெற்றுக் கொண்டு உட்கொண்டார் ஸ்ரீ கண்ணபிரான். இவைகளெல்லாம்
வேற்றமை.
11. கிருஷ்ணாவதாரத்தில் முதலில் பூதனையைக் கொன்றார். ஸ்ரீராமபிரான்
தாடகையை வதம் செய்தார். ஒற்றமை.