தீபத்தின் ஒளியால் வெளியிலுள்ள இருள் நீங்கிப் பொருள்கள் தெரிகின்றன. அதுபோல் ஆண்டவனுடைய அருள் ஜோதியால் மன இருளான மாயை அகன்று ஞானம் பிரகாசிக்கிறது.
ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற கணங்களுடைய காரியங்கள் நடைபெறுகின்றன.
ஸத்வ குணம் மனத்தூய்மையையும் தார்மிக சிந்தனையையும் பக்தியையும் கொடுக்கிறது.
ரஜோகுணம் உலக வியவகாரத்தில் அதிகம் ஈடுபட்டு மனக்குழப்பத்தையும் கோப - தாபத்தையும் ஏற்படுத்துகிறது.
தமோகுணத்தால் சோம்பேறியாகித் தூங்குமூஞ்சி என்ற பெயரை அடைகிறான் மனிதன்.
இந்த மூன்று குணங்கனின் மனிதனுடைய மனோதனுடைய மேனாதர்மத்தை வளர்த்து அதற்கேற்றபடி பிரதிபலிக்கின்றன.
இந்த மூன்று குணங்களின் சேர்க்கைதான் மாயை, அறியாமை எனப்படுகிறது.
ஸத்வ குணம் உள்ள மனிதன் நல்லவனாகவும் தார்மிக எண்ணம்
கொண்டவனாகவும், ரஜோகுணமுள்ளவன் சுயநல முள்ளவனாவும், விருப்பு - வெறுப்புள்ள குணமுள்ளவனாகுவும் தமோகுணமுள்ளவன் அசுர சுபாவம் உள்ளவனாகவும் ஆகிறான்.
ஆகவே ஒவ்வொரு மனிதனும் அந்த அந்தக் குணங்களுக்குத் தகுந்தபடி நல்லவனாகவோ, தன்னலமுள்ளவனாகவோ, அசுர சுபாவம் உள்ளவனாகவோ ஆகிறான்.
இந்த மூன்று குணங்களோடு கூடிய மாயையினால்தான் மனிதன் அல்லல்படுகிறான். பரமாத்மா இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவர்.
ஆகவே ஒவ்வொரு மனிதனும் ஈசுவர உபாசனை அல்லது பக்தி செய்து அதன் மூலம் மனத்தூய்மை பெற்று மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்ட மாயை, அறியாமை இவற்றைக் கடந்த நிலையை - ஞான ஜோதியை அடைய வேண்டும்.
இந்த நிலையை அடைய நம்மிமையேயுள்ள 'நான்'என்ற அகங்காரத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும். புலனடக்கம், மன அடக்கம் இவற்றை மேற்கொண்டு நம் உள்ளத்தில் இருக்கும் ஆத்மாவைப் பார்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
பொருள்களில் பேராசைப் படாமல் இருக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். அப்போது ஞான ஜோதியை நம் உள்ளத்தில் காணலாம்.
தீபாவளித் திருநாளில் ஒவ்வொருவரும் தம் உள்ளத்தில் ஞான ஜோதியைக் காண்பதற்குக் கீதா சாஸ்திரத்தை அருளிய கண்ணபிரானைப் பிரார்த்தித்து அவருடைய அருளைப் பெறுவோமாக!