புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. புரட்டாசி மாதத்தின் சிறப்பு சனிக்கிழமை. சனிக்கிழமை பெருமாளை பூஜை செய்வதற்கு உகந்த நாளாகும். இந்த மாதத்தில் விளக்கேற்றி வைத்து பெருமாளுக்கு பூஜை செய்வது போன்றவைகளெல்லாம் வீட்டிலும் நடைபெறும். கோவில்களிலும் நடைபெறும்.

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். அதிலும், புரட்டாசி சனிக்கிழமை மிகவும் உகந்த நாளாகும். விஷ்ணுவின் அருள்தான் உலகத்தை பரிபாலித்துக் கொண்டிருக்கிறது. பிரம்மா படைக்கிறார். விஷ்ணு அருள் பாலிக்கிறார். ருத்ரன் அனைவருக்கும் சாந்தியளிக்கிறார்.

விஷ்ணுவினுடைய அவதாரங்கள் பலவுண்டு. முக்கியமாக 10 அவதாரங்கள். கிருதயுகத்தில், ஆவேச அவதாரமாக வந்து முடிவடைந்து விடுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை வரலாறு கிடையாது. திடீரென்று ஒரு காரியத்துக்காக அவதாரமெடுத்து அந்தக் காரியம் முடிந்தவுடன் லீனமாகி விடும். இதைத்தான் ஆவேச அவதாரம் என்பார்கள். ஆனால்.

நரஸிம்ம அவதாரமும், வாமன அவதாரம் மிகவும் விசேஷமானது. மச்ச, கூர்ம, வராக இம்மூன்று அவதாரங்களும் வேதத்தைக் காப்பதற்கும், அசுரனை அழிப்பதற்கும் ஏற்பட்ட அவதாரம்.

நரஸிம்ம அவதாரமானது எங்கும் நிறைந்துள்ளவன் பரம்பொருள் என்பதைத் தெரியப்படுத்துவதற்கும், இறைவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தப் பொருளிலும் தோன்றுவான் என்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரம்.

தகப்பன் போல் பிள்ளை இருப்பான் என்பது நியதியல்லை. தாயைப்போல் பிள்ளை என்பதுதான் நியதி. அதைக்காட்டுவது இந்த நரஸிம்ம அவதாரத்தின் வரலாறு. இரண்யகசிபு அசுரபலம் உள்ளவன். அவனுடைய பிள்ளையான பிரஹலாதன் அசுரனாக இருக்கவில்லை. அசுரன் என்ற சொல்லுக்கு உடலில் இன்பத்தை அனுபவிப்பதற்கு இரத்தம் முதலியவை குடித்து இன்பம் கொள்வார்கள் என்று பெயர். மறுபிறவி, கடவுள் என்பதையெல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அப்படிப்பட்டவனுக்குப் பரம பக்தனாக, எந்நேரமும் பகவானின் நாமத்தையே உச்சரிக்கக் கூடியவனாக பிரஹலாதன் பிறந்தான். அதற்குக் காரணம், அவனுடைய தாய் சதாசர்வ காலமும் நாதோபாசனைகளை கேட்டுக் கொண்டு எந்நேரமும் பகவானையே தியானித்துக் கொண்டு பகவான் சிந்தனையிலேயே இருந்து வந்ததிலும், அந்த ஸம்ஸ்காரம் அந்தக் குழந்தைக்கும் இறங்கி, பிறக்கும் போதே பக்தனாக பிறந்தது.

ஆகவே, பெண் கர்பவதியாய் இருக்கும் போது இரண்டு தெரிகிறது. பகவான் எந்த நேரத்திலும்., எப்படி அழைத்தாலும், எந்த வடிவத்திலும் எப்படியும் வருவார் என்பது தெரிகிறத? தாயைப் போல பிள்ளை வருவான் என்பதும் நமக்குத் தெரிகிறது.

வாமன அவதாரம்

பலிச் சக்ரவர்த்தியின் கொட்டத்தை அடக்குவதற்காகவே எடுக்கப்பட்ட அவதாரம். இதில் பகவான் சின்ன சொரூபத்தில், வாமண சொரூபத்தை எடுத்துக் கொண்டு மூன்றடி மண் கேட்கிறார். எல்லோரையும் படைக்கும் பகவான் 3 அடி மண்ணை கேட்கிறார் என்றால் அதிசயமானது.

அதைப் புரிந்து, கொண்ட அஸுர குருமான், பலிச் சக்கரவர்த்தியிடம் 'அவர் கேட்டதை கொடுக்காதே, அவர் உன்னை ஏமாற்ற வந்திருக்கிறார்', என்று சொல்கிறார். அப்போது, பலிச்சக்கரவர்த்தி எல்லோருக்கும் கொடுத்து அருள் பாலிக்கும் பகவானே வந்து மூன்றடி மண் கேட்கிறார் என்றால், நான் எவ்வளவு பாக்கியசாலியாக இருப்பேன். என்று பெருமைப்படுவதாக சொல்கிறார். இரண்டடி மண்ணாக ஆகாயத்தையும், பூமியையும் கொடுத்து விடுகிறார். மூன்றாவது அடி மண்ணிற்கு இடமில்லை. தன்னுடைய தலையை மூன்றாவது அடி மண்ணாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறான். அசச்மயம் வாமண அவதாரமானது, விச்வரூப தரிசனமாக மாறி, அவனுடைய தலையில் தன் காலை வைக்கிறார் பகவான்.

தாம் செய்த பாவங்களும், துன்பங்களும், போக வேண்டும் என்பதற்காக எந்த பகாவனின் திருவடிகளில் நம் தலையை வைக்க நினைக்கிறோமோ, அந்த பகவான் பலிச்சக்ரவர்த்தியின் தலையில் தன் திருவடிகளை வைத்தார் என்றால், அவன் எவ்வளவு பெரிய பாக்கியவான்.

இறைவனுடைய திருப்பாதத்தை தியானம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். இவனுடைய பாக்கியம் பகவானுடைய திருப்பாதத்தையே தன் தலையில் வைத்துக் கொண்டான்.

எனவே இநத் கலியுகத்தில் பகவானின் அவதாரங்களை நாம் தெரிந்து கொண்டு, அவனை பூஜை செய்து வழிபடுவதன் மூலம் நாம் பெரும் புண்யத்தை அடைகிறோம். அதுவும் சாதாரண நாட்களில் செய்யும் போது குறைவான பலன். விசேஷ நாட்களில் செய்யும் போது அதிகப் பலன் உண்டு.

அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் பஜனை முதலியவை செய்து, திருப்பதி பகவானை வழிபட்டு, பெருமாளுடைய அநுக்கிரஹத்திற்கு பாத்திரமாகி, இறையருளை அடைய ஆசீர்வதிக்கின்றோம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is ஆவணியின் அருமை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  கார்த்திகை தீபம்
Next