சோழ நாட்டிலும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

சோழ ராஜாக்களும் தங்கள் ராஜ்யத்தை வேத சாஸ்திரங்கள் நன்றாகப் பிரகாசித்த வித்யா பூமியாகத்தான் வளர்த்துவந்தார்களென்றாலும் சோழதேசப் பாடசாலைகளை ‘கடிகை’ என்ற பெயரில் குறிப்பிடக் காணோம். ஆனாலும் தஞ்சாவூர் ஜில்லா வேப்பத்தூரில் (‘வேம்பற்றூர்’ என்பது அதன் ஸரியான பெயர்) மஹாபண்டிதர்கள் கல்வி போதித்து, ‘கடிகை’ என்றே பெயர் பெற்றிருந்த ஒரு கலாசாலை இருந்ததாகத் தெரிகிறது. திருக்கழித்திட்டை வேதபுரீச்வரர் ஆலய கர்ப்பக்ருஹத்தின் வடவண்டைச் சுவரிலுள்ள முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டிலிருந்து இது தெரிகிறது.

இது ‘கடிகை’ என்ற பெயருக்குத் தெற்கு எல்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆந்திர, கர்நாடகங்களில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மஹாராஷ்டிரத்திலும் பெருமை
Next