மஹாராஷ்டிரத்திலும் பெருமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கடிகையைப் பற்றி ஆரம்பித்தபோது நான் சொன்ன அமலானந்தர் தேவகிரியில் இருந்தவர். தெளலதாபாத் என்று வழங்குகிற அந்த ஊர் மஹாராஷ்ட்ரத்தில் இருப்பது. அவர் கடிகையைப் பற்றிச் சொல்வதால் அங்கேயும் இந்தப் பெயரில் ஸர்வகலாசாலைகள் இருந்ததாகச் சொல்லலாம். அல்லது அவர் காலமான பதின்மூன்றாம் நூற்றாண்டு மத்தியில்கூட காஞ்சிக் கடிகையே தேவகிரி வரை எட்டும் க்யாதியுள்ளதாக இருந்திருக்கலாம். இந்த கடிகைக்கு தேசத்தின் நானாபக்கங்களிலிருந்தும் நானா ஸம்ப்ரதாயஸ்தர்களும் வந்ததால்தான் அவர் இங்கே அதர்வ வேதப் பசங்கள் ஸந்நியாஸியைப் பற்றிச் சொல்லும் மந்த்ரம் இன்னாருக்குத் தெரியாதா என்று கேட்கிறார் – என்றும் வைத்துக் கொள்ளலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சோழநாட்டிலும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கடிகைக்கு கடிகாரத் தொடர்புண்டா?
Next