கடிகாசலம், நான்மணிக்கடிகை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

சோளிங்கர் என்று ஒரு க்ஷேத்ரம் இருக்கிறதே அதற்கு சோளஸிம்ஹபுரம் என்று பூர்வத்தில் பெயர். (சோளலிங்கபுரம் என்றும் சொல்லுவார்கள்.) அதுதான் சோளிங்கராகிவிட்டது. இதற்கே கடிகாசலம் என்று இன்னொரு பெயர். ‘கடிகை மலை’ என்று அர்த்தம். இந்த இடத்தில் கடிகை என்றால் என்ன அர்த்தம் என்று விசாரித்துப் பார்த்தேன். இந்த மலையில் ஒரு கடிகை – அதாவது ஒரு நாழிகை – தங்கினாலும் போதும், அங்கே கோயில் கொண்டிருக்கும் நரஸிம்ஹ மூர்த்தியின் சக்தியினால் எல்லாத் தீமைகளும், ஆவிக்கோளாறுகளுங்கூட பறந்து போய்விடுமென்பதால் இப்படிப் பெயர் என்று சொன்னார்கள். என் “ரிஸர்ச்”சுக்கு அது ப்ரயோஜனப் படவில்லை.

“நான்மணிக்கடிகை” என்று தமிழில் ஒரு நூல் சொல்கிறார்களே, அதில் “கடிகை” என்பது என்னவென்று கேட்டுப்பார்த்தேன். கடிகை என்றால் சின்ன ‘பீஸ்’ (துண்டு) என்றும், துண்டு துண்டாக உள்ள நாலு நாலு மணியான உபதேசங்களைக் கோத்து இதில் ஒவ்வொரு செய்யுளையும் செய்திருப்பதால் நூலுக்கு இப்படிப் பெயர் என்றும் தெரிந்தது. இதுவும் ஒரு வித்யாஸ்தானத்துக்கு ஏன் கடிகை என்று பேர் வரவேண்டும் என்பதைப் புரியவைக்கவில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கடிகைக்கு கடிகாரத் தொடர்புண்டா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே : ப்ரயாகையிலும்
Next