சிறிது ஸம்ஸ்க்ருத பாடம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பாடம் சொல்லிக் கொடுப்பதைப் பற்றியே நிறையச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேனாதலால் உங்களுக்கும் கொஞ்சம் ஸம்ஸ்க்ருத பாடம் சொல்லித் தருகிறேன் – பட்டஸோமேச்வரரின் புஸ்தகத்திலிருந்து ‘கோட்’ செய்தேனே அதற்கு அர்த்தம் சொல்லித் தருகிறேன்.

“வேத கௌசல ஜிஜ்ஞாஸார்த்தம்” – வேதத்தில் எவ்வளவு தேர்ச்சியிருக்கிறதென்று அறிவதற்காக;”தத்தத் வேதபாக” – அந்தந்த வேத பாகங்களின் “சிஹ்ந லேகயாநி” – ஸங்கேதக் குறிப்புத் துண்டுகளை;”கடிகாயாம் கும்ப(ஆ)க்யாயாம்” – கும்பங்கள் என்று சொல்லும் கடிகைகளில்;”நிக்ஷிப்ய” – போட்டு “தத்தத் வேத பாக பரீக்ஷா காலே” – அந்தந்த வேத பாகத்தில் பரீக்ஷை நடக்கும்போது “தாநி ஆக்ருஷ்ய” – அவற்றை (அந்த slip-களை) எடுத்து; ‘ஆக்ருஷ்ட லேக்ய சிஹ்நிதம்” – எடுத்ததில் எழுதியிருக்கும் ஸங்கேதப்படி;”வேதம் பட இதி” “வேதம் ஓது” என்று “அத்யேதார:” – அத்யாபகர்கள்;”அநுயுஜ்யந்தே” பரீக்ஷை நடத்துகிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பெயர் விளக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கும்பத்தின் பொருத்தம்
Next