ஸமரச அம்சம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பேதத்திலேயே ஒற்றுமை((Unity in diversity)தான் நம் மதத்தின் முக்ய அம்சம் என்பது அநேக சாஸனங்களிலிருந்து தெரிகிறது. முன்னேயே காட்டினமாதிரி ஒரே கூரையின் கீழேயேதான் இப்படி வேதம், ஆகமம் இரண்டும் அப்யஸிக்கப்பட்டிருக்கின்றன. அதுமாத்திரமில்லை, வைஷ்ணவத்தில் பாஞ்சராத்ரம், வைகாநஸம் என்று உள்ள இரண்டு ஆகமங்களில் வைகாநஸ ஆகமத்தைப் பல இடங்களில் பாஞ்சராத்ரக் கோயில்களிலேயே போதித்திருக்கிறார்கள். இதையும்விட ஸந்தோஷப்படும்படியாக, சில பெருமாள் கோயில்களில் சைவ ஆகம போதனை நடந்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வேத - ஆகமங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆலயமும் வித்யையும்
Next