ஸ்வதேச வித்யைகளுக்கு “திட்டம்” : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

திட்டம் திட்டம் என்று பொருளாதாரத்துக்கே போட்டு ஆயிரம் கோடிக் கணக்கில் செலவழிக்கிற அரசாங்கம் கலாசாரம், கலாசாரம் என்று சொல்வதோடு நிற்காமல் அதில் நூற்றில் ஒரு பங்கு இதற்காகத் திட்டம் போட்டால் கூடப் போதும், இம்மாதிரி ஸ்வதேசிய பூர்வ சாஸ்திரங்களுக்காக, ஸ்காலர்ஷிப் ஸ்டைபென்ட் எல்லாம் கொடுத்து படிப்பு முடிந்த பின்னும், ரிஸர்ச்சுக்காகவும், ஆயுஸ் பர்யந்தம் இந்தப் படிப்பாளிகளுக்கு ‘க்ரான்ட்’ ஆகவும் பொருளுதவி செய்து நம்முடைய பெரிய டிரெடிஷனைப் போஷித்துவிட முடியும்.

ஆனால் இது சாஸ்த்ரோக்தமாக நடந்தாலே உண்மையான ப்ரயோஜனத்தைக் கொடுக்கும் என்பதைப் பார்க்கும் போது ராஜாங்கம் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ளாமலிருப்பதே ஒரு விதத்தில் தேவலை என்று நினைக்கும்படியாகவும் இருக்கிறது. “சீர்திருத்தக் கொள்கை” என்று சொல்லப்படுவதையே எல்லா அரசியல் கட்சிகளும் பின்பற்றுகிற சூழ்நிலையில் சாஸ்த்ரோக்தமான விதி நிஷேதங்களின்படி ராஜாங்க ஆதரவில் எதுவாவது நடக்க முடியுமா என்றே இருக்கிறது. ஆனபடியால் ராஜாங்கத்தை எதிர்பார்த்துக்கொண்டோ, குறை சொல்லிக்கொண்டோ இல்லாமல், சாஸ்த்ராபிமானமுள்ள பொதுஜனங்களேதான் ஆனதைச் செய்வதில் நன்றாக ஈடுபடவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பெருமையும் சிறுமையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அதற்குரிய முறைப்படி
Next