அஹம் அடிபடவே குருகுலம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த அஹங்கார நாசத்துக்கு ரொம்பவும் உதவியாயிருப்பது குருகுலவாஸம்தான். “எங்கேயோ இருக்கிற ஈச்வரனிடம் பக்தி பண்ணி, எப்போதோ எழுதிவைத்த சாஸ்திர ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டு விநயமாகப் போ” என்றால் இவை உள்ளூற ஏறாமல் மேல்மட்டத்தோடு நிற்பதாகவும், எனவே ‘தான்’ போகாததாகவுமே இருக்கும். அதனால்தான் ப்ரத்யக்ஷமாக ஒரு பெரியவனை குரு என்று காட்டி, அவன் கிட்டே வஸிக்கும்படியாகக் கொண்டு விட்டு விநயத்தை வளர்க்கவேண்டுமென்பது. கண்ணுக்கு முன்னால் அந்த குரு செய்கிற சுத்தமான ஈச்வர பக்தியும், அவர் அநுஸரிக்கிற தர்ம கர்ம அநுஷ்டானங்களும் தன்னால் சிஷ்யனுக்குள் புகுந்துவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is விநயத்தோடு இணைந்த வித்யை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஏன் சாத்யமில்லை?
Next