பொதுமக்களின் பொறுப்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அதனால் ஏதோ கொஞ்சத்தில் கொஞ்சமாவது இப்போதும் குருகுலவாஸக் கல்வி முறையை உயிர்ப்பித்துத் தரவேண்டும். மற்ற விஷயங்களைவிட வேத வித்யைக்கு இம்முறையை அவசியம் ஏற்படுத்தித் தரவேண்டும். பூர்ணமான ஆசார்ய லக்ஷணப்படி, சிஷ்யனுக்காக எல்லாப் பொறுப்பும் ஏற்றுக்கொண்டு, அவனிடமிருந்து கொஞ்சம் கூட த்ரவ்ய லாபம் எதிர்பார்க்காமல், அவனையும் ரக்ஷித்துத் தன் குடும்பத்தையும் நடத்திக்கொள்ள வசதிபெற்ற வைதிக குருமார் இக்காலத்தில் கிடைப்பதில்லை. முன் காலத்தில் ராஜமான்யம் யதேஷ்டமாக விடப்பட்டதால் இப்படிப்பட்ட குருமார் இருக்க முடிந்தது. அதற்கு பதிலாக இப்போது நாம், அதாவது ஜனநாயகத்தில் ராஜாக்களாக உள்ள பொதுமக்களான நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்துதான் மூலதனம் வைத்து இந்த அவச்யமான முறை நடைமுறையிலிருந்து மறைந்து போகாமல் செய்யவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஏன் சாத்யமில்லை?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வேதவித்யை வளர
Next