வித்யையும் வித்தமும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வித்யைக்காகவே வித்யை என்று குருமார்கள் கற்றுக் கொடுப்பதும், சிஷ்யர்கள் கற்றுக்கொள்வதும்தான் உத்தமம். வித்தத்துக்காகவும் (பணத்துக்காகவும்) வித்யை என்பது மத்யமம். வித்தத்துக்காகவே வித்யை என்றால் அது அதமம். வித்யையே இல்லாமல் வித்தம் மட்டும் குறிக்கோள் என்று தற்போது அதமாதமமாக உலகம் முழுதும் ஒரு ‘அவுட் – லுக்’ உண்டாகியிருக்கிறது. இந்நிலையில் நாம் ரொம்பவும் ஐடியலிஸம் வைத்துக்கொண்டால் ப்ரயோஜனப்படாது. அதனால்தான் ஓரளவு கணிசமான த்ரவிய ஸஹாயம் குரு – சிஷ்யர்களுக்குச் செய்தே வித்யையை வளரச் செய்யவேண்டுமென்கிறேன்.

அதே ஸமயத்தில், எங்கேயாவது ஒருசில இடங்களிலாவது பண ஸம்பந்தமேயில்லாத, லக்ஷ்ய நிலையை இன்றைக்கும் நடத்திக் காட்டுவதான குருகுலமும் ஏற்பட வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வேதவித்யை வளர
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பிக்ஷ£சார்யம்
Next