வாரச் சாப்பாடு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஒவ்வொரு நாளும் பல க்ருஹங்களுக்குப் போய் பிக்ஷை கேட்பது என்றில்லாமல் “வாரம்” என்ற முறைப்படியாவது செய்யலாம். அதாவது, வித்யார்த்தி வாரத்திலுள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அகத்தில் பிக்ஷை வாங்குவது என்று வைத்துக் கொள்ளலாம். அப்போது, போடுகிறவர்களுக்கு ‘தினந்தினம் வருகிறானே’ என்று இல்லாமலிருக்கும். ஆனால் குருவுக்கும் சேர்த்து வாங்க வேண்டுமென்று இருந்தால் அப்போது பல வீடுகளில் கொஞ்சம் கொஞ்சம் வாங்கினால்தான் முடியும். இதெல்லாம் அந்தந்த குருகுலம் உள்ள நிலைமை, ஊர்க்காரர் மனப்பான்மை, மற்ற ஸந்தர்ப்பங்களைப் பொறுத்து முடிவு பண்ணவேண்டிய விஷயம். மொத்தத்தில் பிக்ஷாசர்யமுள்ள குருகுலவாஸத்தை உயிர்ப்பிப்பது ரொம்பவும் ச்ரேஷ்டம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பிக்ஷ£சார்யம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அவர்கள் தியாகமும் நமது தியாகமும்
Next