புராணம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வேத உபாங்கங்களில் புராணம் என்பது தற்காலத்தில் உபந்நியாஸங்கள், ப்ரவசனங்கள், ஹரிகதைகள் ஆகியன பரவியிருப்பதால் ஓரளவு நன்றாக ப்ராகாசிப்பதாகத் தோன்றுகிறது. ஆனாலும் இங்கேயும்கூட ஆழ்ந்து பார்த்தால், பதினெட்டுப் புராணங்களில் பல கொஞ்சங்கூட ப்ரசாரத்துக்கு வரவில்லை என்பதும், உப புராணங்களும் ஸ்தல புராணங்களும் ரொம்பவும் மங்கிக்கொண்டே வருகின்றன என்பதும் தெரியும். இவற்றிலும் இருக்கப்பட்ட ஓரிரு பண்டிதர்களை ஆதரித்து, அவர்கள் புதிதாகப் பண்டிதர்களை உண்டாக்கும்படியாக சிஷ்யர்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதற்கான ஸஹாயங்களைச் செய்யவேண்டும்.

(பூர்வ) மீமாம்ஸை, தர்க்கம் (ந்யாயசாஸ்த்ரம்) , தர்ம சாஸ்த்ரம் முதலான மற்ற உபாங்கங்களுக்கும் இப்படியே ஏற்பாடு பண்ணணும். இவற்றில் நம் ஆசார அநுஷ்டானங்களைச் சொல்லிக் கொடுக்கும் தர்ம சாஸ்த்ரம் நம்முடைய வாழ்க்கையை நிஜமான பாரதப் பண்பாட்டின்படி வாழும் வாழ்கையாக ஆக்குவதற்கு ரொம்பவும் முக்கியம். ஆனால் அறிவு ரீதியில், வித்யை என்று பார்க்கும்போது மீமாம்ஸா சாஸ்த்ரத்தையும், தர்க்க சாஸ்த்ரத்தையும் ப்ரசாரப் படுத்துவது முக்யமாகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பல ஸித்தாந்த ஒப்புவுமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆகம சாஸ்த்ரம்
Next