எல்லாத் துறையிலும் குருகுல வாஸம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதற்கு ரொம்பவும் தலைசிறந்த வழி குருகுலக் கல்வி. உண்மையான குருகுல முறையைக் கடைப்பிடித்து, குருவுடைய அறிவோடு அருளையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வித்யாப்யாஸம் பெற்றால் எல்லாக் குறைபாடுகளும் போய்விடும். ஸெக்யுலர் எஜுகேஷன் (லௌகிகக் கல்வி) கூட இம்மாதிரி ரிடயரான ஆசிரியர்களிடமிருந்தும், ப்ரொஃபஸர்களிடமிருந்தும் அவர்களோடேயே வஸித்து அவர்களுக்குத் தொண்டு செய்துகொண்டே கற்று, ப்ரைவேட்டாகப் பரீக்ஷை எழுத இடமிருந்தால் அப்படிச் செய்வது ரொம்பவும் ச்லாக்யம். ‘பிள்ளையாண்டான் ஒரு வருஷம் ‘கோட்’ அடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு ஒரு வருஷமாவது உங்கள் குழந்தைகளை குருகுலவாஸம் செய்யவிட்டு, அதற்கான உதவியை குருவுக்குப் பண்ணுங்கள், அல்லது கோடை விடுமுறை இரண்டு மாஸத்திலாவது இதை நடத்திப் பார்க்க வழி தேடுங்கள், என்றெல்லாம் அடிக்கடி நானும் சங்கு ஊதிக்கொண்டே இருக்கிறேன். விடிகிற போது விடியட்டும்.

குருகுலக் கல்விக்கு அடுத்தபடியாக, next best என்கிறார்களே, அப்படி வருவது சாஸ்திரோக்தமான முறையில், குருமார்கள் கட்டுப்பாட்டின்கீழ் பல பசங்கள் ரெஸிடென்ஷியலாக (அங்கேயே வஸித்துக்கொண்டு) படிக்கிற வித்யாசாலைகள்.

இரண்டில் ஒன்று ஏற்பட்டு வ்ருத்தியாவதற்கு உங்களைத் தூண்டி விடுவதற்காகத்தான் இத்தனை நேரம் குருகுலம் பற்றியும், கடிகாஸ்தானம் பற்றியும் சொன்னேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is உயிரோடு ஒட்டிவைக்க வேண்டும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அம்பாள் அருள்வாளாக
Next