ஜாதி நாட்டாண்மை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஜனநாயகத்தின் அம்சமாக நாம் ஆதிகாலத்திலிருந்தே பார்க்கிற இன்னொன்று, ஸகல ஸமூஹத்தினரும் சேர்ந்து பெரிய அளவில் ராஜ்யம் முழுதற்குமான கார்யங்களை கவனித்ததோடு மட்டுமில்லாமல், அந்தந்த ஜாதியினரும் ஸ்வதந்த்ரமாகத் தங்களுடைய கூட்டு வாழ்க்கையை நாட்டாண்மைகள் மூலம் நிர்வஹித்துக் கொண்டதாகும்.

‘குலம்’ என்பது ஒரு குடும்பத்தைக் குறித்த ஏற்பாடு; ராஷ்ட்ரம், ஜனபதம் என்கிறவை ஒரு ராஜ்யம் (ஜனபதம் என்றால் டவுனாக இல்லாத ‘கன்ட்ரி’ – க்ராமப்புறம் – என்றும் சொல்கிறார்கள்) , இந்த இரண்டுக்கும் நடுவே ‘ச்ரேணி’ என்று ஒன்று. அது ஒவ்வொரு தொழில்காரர்கள் ஒன்றாகச்சேர்ந்த அமைப்பு. ‘சேணியர்’ என்று இப்போது நெசவுத் தொழிலில் உள்ளவர்களைச் சொல்வது ‘ச்ரேணியர்’ என்பதிலிருந்து வந்ததுதான். அவரவர் தொழிலை வைத்து guild -கள் என்பதுபோல் ஏற்பட்ட ச்ரேணிகளில் நெசவுத் தொழிற்காரர்கள் நன்றாகக் கட்டுக்கோப்புடன் தங்களையும் ஒரு ஸமூஹமாக நெய்துகொண்டு அதனால் ச்ரேணியர், சேணியர் என்றே சிறப்பாகப் பெயர் பெற்றிருக்கிறார்கள் போலிருக்கிறது.

ரொம்பவும் பூர்வகாலத்தில், அதாவது இன்றைக்கு நாகரிக உச்சியிலுள்ள மேல்நாட்டுக்காரர்களுக்கு நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாத காலத்திலேயே, நம்முடைய தேசத்தில் மக்கள் பலவிதங்களில் குடியரசு, ஜனநாயகம், self-government (ஸ்வய ஆட்சி) முதலானவற்றின் அம்சங்களைப் பெற்றிருந்திருக்கிறார்களென்று காட்டுவதற்காக ஏதோ கொஞ்சம் சொன்னேன். அந்த நாளிலிருந்தே நம் நாட்டில் ப்ரஜை என்பவன் ஆளப்படுபவனாக மட்டுமில்லாமல் ஆட்சியிலும் தானே ஒரு பங்கு பெற்றிருந்தானென்று தெரிவிக்க நினைத்தேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வேதத்திலும் ஜனநாயக அம்சம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தகுதி தேவை
Next