தகுதி தேவை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆனாலும் ராஜ்ய நிர்வாஹம் என்பது ரொம்பவும் பெரிய விஷயம்; சிக்கலான விஷயம். ஒரு ராஜ்யத்தைக் கட்டி ஆளுவது, ஒரு பெரிய ஜனஸமூஹத்துக்குக் காப்புத்தருவது, அவர்களுக்காகச் சட்டம் பண்ணுவது, அந்தச் சட்டங்களை அவர்கள் பின்பற்றும்படியாகப் பண்ணுவது என்பதற்கெல்லாம் நிறையப் படிப்பறிவு, பகுத்தறிவு, கார்ய ஸாமர்த்யம், உலக அநுபவம் ஆகியவை இருந்தால்தான் முடியும். வீட்டை ஒழுங்காக நடத்துவதென்பதே கஷ்டமாயிருக்கிறது. ஒரு ராஜ்யத்தை நடத்துவதென்றால் சும்மாவா? ஆனதால், வீட்டை நடத்தவே ஸாமர்த்யம் போதாதவர்களாகத்தான் ஜனங்களில் ரொம்பப் பேர் இருக்கும்போது, நாட்டு நிர்வாஹத்திலும் அவர்களுக்கு நேராகப் பொறுப்புத் தந்தால்தான் என்ன ஆகும்?

அதனால் எல்லாரும் நேராக ராஜ்யப் பாரம் பண்ணுவது என்று இருக்க முடியாது.

அதற்கான தகுதிகள் படைத்த சிலரைக் கொண்டுதான் ஆட்சி நடக்கவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஜாதி நாட்டாண்மை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தேசத் தலைமைக்கு அரசன்
Next