விசித்ர அம்சம் கொண்ட தேர்தல் முறை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இம்மாதிரி ஸமாசாரங்களையெல்லாம் நம்முடைய பழைய கால பெரியவர்கள் – சோழர் காலம் என்று சொன்னேனே, அப்போதிருந்த பெரியவர்கள் – யோசித்துப் பார்த்திருக்கிறார்கள். ஆனதினால், ஊர் ஸபைக்காரர்கள் ராஜாங்க அதிகாரத்தின் கீழ் நியமனமாகாமல், தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வஹிக்கும்படி ஏற்பாடு செய்ய எண்ணியபோதே, அது ஸர்வஜன வோட்டெடுப்பாக இருந்தால் ஸரிப்பட்டு வராது என்பதையும் கவனித்திருக்கிறார்கள். தகுதி நிர்ணயம் பண்ணிச் சில பேருக்கு மட்டும் வோட்டுரிமை தரலாமா என்றால், இதனாலே ஊர் ஜனங்களிடம் உயர்வு – தாழ்வு எண்ணங்கள் ஏற்பட்டு ஸமூஹத்தில் விரிசல் கண்டுவிடப் போகிறதே என்று நினைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

ஆகையால், நான் சொல்லப்போவது விசித்ரமாக இருக்கலாம், ராஜாங்க நியமனமாயுமில்லாமல், ஜனங்களில் எல்லோருமோ சிலரோ வோட் போடுவதாகவுமில்லாமலுள்ள ஒரு தேர்தல் முறையை ஏற்படுத்தினார்கள்.

விசித்ரம் என்று சொன்னதால் அதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உண்டாயிருக்கும். உடனேயே விசித்ரத்தைச் சொல்லி ஆர்வத்தைத் தணித்து விடுவதில் ஸ்வாரஸ்யமில்லை. ஆகையால் இது ஸம்பந்தமான மற்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அப்புறம் இதற்கு வருகிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அபிப்ராய பேதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சோழ வம்சம்
Next