சோழ வம்சம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தமிழ்நாட்டின் சரித்ரம் இக்கால ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்ளும்படியாக ஆரம்பிக்கும் கி.மு. மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளிலேயே மூவேந்தர்கள் என்று சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் இருந்திருக்கின்றன. சங்க இலக்கியத்திலேயே பல சோழ ராஜாக்களைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது. புராண ரீதியாக ப்ரஸித்தி பெற்றவர்கள் திருவாரூரிலிருந்துகொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சக்ரவர்த்தி, மநுநீதிச் சோழன் முதலான ராஜாக்கள், சரித்ர பூர்வமாக ஒப்புக்கொள்ளும் பழைய சோழ அரசர்களில் கரிகாலச் சோழன், கோச்செங்கட் சோழன் முதலானோர் ப்ரஸித்தி பெற்றவர்கள். அவர்களுடைய காலத்தில் கொடிகட்டிப் பறந்த சோழ அரசு அப்புறம் நொடித்துப் போய், கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பல்லவ ஸாம்ராஜ்யம் விஸ்தரிப்புப் பெற்றுப் பெருமை கண்டது. மறுபடியும் ஒன்பதாம் நூற்றாண்டு மத்தியில் விஜயாலய சோழன் காலத்தில் சோழ வம்சம் தலைதூக்கி, தலைமுறைக்குத் தலைமுறை வ்ருத்தியாகி, ராஜராஜன், ராஜேந்திரன் முதலியவர்கள் ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் மிகவும் அபிவிருத்தியடைந்த மஹாஸாம்ராஜ்யமாக ஆயிற்று. இப்படி சுமார் நானூறு வருஷங்கள் இந்தப் பிற்காலச் சோழ வம்சம் புகழோடு விளங்கிற்று.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is விசித்ர அம்சம் கொண்ட தேர்தல் முறை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தேர்தல் குறித்த கல்வெட்டு
Next