சாஸ்திர அறிவும், காரியத்திறனும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

4. நாலாவது யோக்யதாம்சம்: அபேக்ஷகர்கள் வைதிக தர்மம் இன்ன என்று தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். நம்முடைய சாஸ்த்ரக் கொள்கைகளை நன்றாக அறிந்தவர்களாயிருக்கவேண்டும். நல்ல படிப்பறிவு உள்ளவர்களாயிருக்க வேண்டும்.

இதைச் சொன்ன கையோடேயே இந்த யோக்யதாம்சத்துடன் சேர்த்தே இன்னொன்றையும் வலியுறுத்தியிருக்கிறது. சாஸ்த்ரக்ஞர்களாகவும் படிப்பாளிகளாகவும் இருக்கப்பட்ட பல பேருக்குக் கார்யத் திறமை இல்லாமலிருப்பதைப் பார்க்கிறோமல்லவா? ஊர் நிர்வாஹத்தில் பொறுப்பு ஏற்பவர்கள் இப்படி இருக்கப்படாது. அவர்கள் வித்வான்களாக இருப்பது மட்டுமில்லாமல் செயல்திறமையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும் என்று விதி செய்திருக்கிறது. ‘வேதத்திலும், சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணர் என்னப்பட்டிருப்பவர்’ என்று சாஸன வாசகம் கூறுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is திருத்தக் கூடிய விதிகளும்-திருத்தக் கூடாத விதிகளும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அர்த்த சுத்தமும் ஆத்ம சுத்தமும்
Next