ஜீவஸாரமான தகுதி : அர்த்த சுத்தமும் ஆத்ம சுத்தமும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

5. இவர்கள் ஸொத்து உள்ளவர்களாயிருக்க வேண்டும் என்பதை முதல் இரண்டு விதிகளாலும் தெரிந்து கொண்டோம். இப்போது அது தப்பு வழியில் ஸம்பாதித்ததாக இருக்கப்படாது, ஸபை மெம்பர் ஆன பிற்பாடும் இவர்கள் தப்பு வழியிலே போய் ஸம்பாதிக்கக் கூடாது என்று தர்மத்தால் அர்த்தத்துக்கு – அறத்தினால் பொருளுக்கு – வேலி போட்டுக் கொடுப்பதாக ஒரு ஷரத்து வருகிறது. ஸொத்து விஷயம் மட்டுமில்லை, எல்லா விஷயத்திலுமே சிறந்த ஒழுக்கம் உள்ளவர்களாயும் ஆத்ம ஸம்பத்தை வ்ருத்தி செய்து கொண்டவர்களாயும் அபேக்ஷகர் இருக்க வேண்டும். அபேக்ஷகர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸபையின் அங்கத்தினர் ஆன பிற்பாடும் இதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நியாயமான முறையில் அடைந்த ஸொத்துக்களையும், பரிசுத்தமான நடத்தையும் உள்ளவர்கள்தான் முதலில் அபேக்ஷகராக இருக்கமுடியும், பிற்பாடு அங்கத்தினராக நீடிக்கவும் முடியும். ‘அர்த்த சுத்தமும் ஆத்மசுத்தமும் உடையார்’ என்று சாஸனம் சொல்லும். இந்த வாசகந்தான் ஊரின் நிர்வாஹஸ்தர்களுக்கான யோக்யதாம்சங்கள் அத்தனைக்கும் ஜீவஸாரம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சாஸ்திர அறிவும், காரியத்திறனும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தொடர்ந்து அங்கம் வகிக்கலாகாது
Next