பதவிநீக்கமும் நிரந்தரத் தடையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த வருஷம் அங்கம் வஹிக்கும் ஒருவன் மூன்று வருஷத்துக்கு அப்புறம் எலெக்ட் செய்யப்படுவதற்குங்கூட இன்னொரு கட்டுப்பாடு இருக்கிறது. இப்போது பதவிக்காலத்தில் முறைதப்பி நடந்த எவனும் மூன்று வருஷத்துக்கு அப்புறமுங்கூட அபேக்ஷகனாக முடியாமல் அது தடுத்து debar செய்கிறது. இவனுடைய தப்பு கண்டுபிடிக்கப்பட்டவுடனேயே இவன் பதவியிலிருந்து விலக்கி வைக்கப்படுவான். அப்புறமும் எலெக்ஷனுக்கு நிரந்தமாக debar ஆகிவிடுவான். ஏதோ ஒரு வருஷத்தில் மெம்பராயிருப்பவன் ஸரிவரக் கணக்குக் காட்டியிராவிட்டாலோ, தப்புக் கையெழுத்துப் போட்டிருந்தாலோ, வேறே குற்றம் செய்திருந்தாலோ உடனே டிஸ்மில் ஆகி, அப்புறமும் எலெக்ஷனுக்கு டிஸ்க்வாலிஃபை ஆகிவிடுவான் (அபேக்ஷகனாகும் தகுதி இழந்துவிடுவான்) .

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ராஜபீட விஷயமும் ஊர்ச்சபை விஷயமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தகுதி இழக்கும் உறவினர்கள்
Next