தகுதி இழக்கும் உறவினர்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பொது நிர்வாஹத்தில் இப்படிப்பட்ட தப்புக்கள் ஏற்படவே கூடாது என்பதில் எவ்வளவு கருத்தாயிருந்திருக்கிறார்களென்பது, தப்புச் செய்த அவனை மட்டுமின்றி, அவனுடைய கீழ்க்கண்ட உறவினர்கள் அத்தனை பேரையும் டிஸ்க்வாலிஃபை செய்திருப்பதிலிருந்து தெரிகிறது. தகப்பனார், பிள்ளை, ஸஹோதரர், மாமனார், மைத்துனர், ஸஹோதரியின் புருஷன், ஸஹோதர ஸஹோதரிகளின் பிள்ளைகள், மாப்பிள்ளை, தகப்பனாருடைய ஸஹோதரர்கள், அவர்களுடைய பிள்ளைகள், அத்தை பிள்ளை, மாமா, மாமா பிள்ளை, தாயாருடைய ஸஹோதரி பிள்ளை – என்றிப்படி, ஒரு மெம்பர் செய்த குற்றத்துக்காக அவனுடைய பந்து வர்க்கம் முழவதையுமே ஸபை மெம்பர்ஷிப் பெறமுடியாதபடி அடியோடு ஒதுக்கிவிடுவதென்றால், அப்புறம் நிர்வாஹத்தில் தவறு எப்படி நடக்கும்? இந்த உறவுமுறைக்காரர்கள் எல்லோரையுமே “ஆத்மபந்துக்கள்” என்று சாஸனம் விளக்கியிருக்கிறது.

குற்றம் பண்ணினால் அது முதலுக்கே அபேக்ஷை பெற முடியாதபடி ஒருவனை டிஸ்க்வாலிஃபை செய்ததோடு நிற்கவில்லை; முதலில் க்வாலிஃபிகேஷன் பெற்றிருந்தாலும் பதவிக்கு வந்த பிற்பாடு குற்றம் பண்ணினால் அது அவனை பந்து வர்க்கத்தோடு சேர்த்து டிஸ்க்வாலிஃபை செய்து விட்டது – என்கிற அம்சத்தை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பதவிநீக்கமும் நிரந்தரத் தடையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பஞ்சமாபாதகம்
Next