‘சந்திர ஸூரியர் உள்ளவரை’ : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தங்கள் ஊர் நிர்வாஹத்தில் தப்பானவர்களின் ஆதிக்யம் போய் நல்லவர்கள் வளருவதற்காக, மேற்படிசாஸனம் உருவான வருஷத்திலிருந்து சந்த்ர ஸூரியர்கள் உள்ள அளவும் இம்மாதிரி குடவோலை அமைப்போம் என்ற சாஸனம் முடிகிறது, ‘இப்பரிசே இவ்வாண்டுமுதல் சந்திராதித்தவத்தென்று நங்கிராமத்துக்கு அப்பியுதமாக (‘அப்யுதயம்’ என்றால் க்ஷேமாபிவ்ருத்தி) துஷ்டர் கெட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக (அதாவது உயர் மக்கள் வளருவதற்காக) வியவஸ்தை செய்தோம் – உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்து சபையோம்’ என்று முடிகிறது.

துரத்ருஷ்டவசமாக இம்மாதிரிக் குடவோலைத் தேர்தல் முறை அவர்கள் ஆசைப்பட்ட மாதிரி சாச்வதமாக நீடிக்காமல் போய்விட்டது.

‘சபையோம்’ என்றால் ‘ஸபையோரான நாங்கள்’ என்று அர்த்தம் – அதாவது மேற்படி சாஸன விதிகளை ஃப்ரேம் செய்தவர்கள் முடிவில் கையெழுத்துப் போடுவது போல் தங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பெருன்பான்மை அடிப்படை இல்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நிர்வாஹப் பிரிவுகள்
Next