சாஸ்த்ர கர்மாவுக்குப் பின்னணியான ஸத்சிந்தனை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படிச் சொன்னால் கர்மா என்பது கார்யத்தோடேயே ஒரேயடியாய் முடிந்துவிடுகிறது என்று அர்த்தமில்லை. மனஸின்மீதும் அதன் பாதிப்பு – கெட்டதான பாதிப்பு, நல்லதான பாதிப்பு இரண்டும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால் மனஸினதாகிய எண்ணங்கள் கலக்காமல் ஜடமான மெஷின் மாதிரி நாம் கார்யம் பண்ணுவதில்லை. கார்யம் ‘ப்ராமினன்’டாக முன்னுக்குத் தெரிந்தாலும், அந்தக் கார்யத்துக்குப் பின்னே ஒரு எண்ணமுண்டு. பொதுவாகச் சொன்னால் நாம் மனஸ் போனபடி கார்யம் பண்ணுவதெல்லாம் லோக இன்பங்களிலுள்ள ஆசை எண்ணத்தின் மேலேதான். ‘இப்படிப் பண்ணிப் பண்ணி அழுக்கேறிப் போன நம்மை சுத்தி செய்துகொண்டு ஞான விசாராதிகள் செய்வதற்குரிய பாத்ரமாக ஆக்கிக்கொள்ளவேண்டும்’ என்ற எண்ணமும், ‘ஸமூஹத்துக்கான பலதரப்பட்ட கார்யங்களில் குழப்பமேற்படாமல் அவை ஒழுங்காகப் பிரிவினை செய்யப்பட்டு க்ரமப்படி ஆற்றப்படவேண்டும்; இதனால் லோகேக்ஷமம் உண்டாக வேண்டும்’ என்ற அன்பெண்ணமும் ஒன்றுகலந்தே சாஸ்த்ரம் விதித்த ஸ்வதர்ம கர்மாக்களுக்குப் பின்னே அடிப்படையாக இருக்கின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அன்பு, பக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கார்யமும் த்யானமும்
Next