யுத்தம் தீர ஆசையை அழிக்க! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நமக்கு ஸந்தோஷம் தருவதாகத் தோன்றினாலும் உண்மையில் கஷ்டம் விளைவிப்பதுதான் என்பதாகச் சில ஆசைகளைப் பற்றி மாத்திரம் நமக்கே தெரிகிறது. உதாரணமாக, அரிக்கிறபோது சொறிந்துகொண்டால் ஹிதமாயிருக்கிறதென்று அப்படிப் பண்ணினால் அப்புறம் புண் ஜாஸ்தியாவது நமக்கு நன்றாகத் தெரிகிறது. அதனால் சொறிந்து கொள்ளாமல் கட்டுப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறோம். எல்லா ஆசையுமே அரிப்புத்தான். ஆசை என்பதே அரிப்புத் தான். அதன் பூர்த்திக்காகப் பண்ணுவதெல்லாமே சொறிந்து கொடுத்துப் புண்ணை ‘ஸெப்டிக்’ ஆக்குவதுதான்.

இதனால் என்ன ஏற்படுகிறதென்றால் ஆசையை அழித்தால்தான் உள்ளே நடக்கும் தேவாஸுர யுத்தம் தீரும், நமக்கு சாந்தி கிடைக்கும்.

எப்படி அழிப்பது?

நூறு, ஆயிரம், லக்ஷமாக இத்தனை ஆசைகள் இருக்கின்றனவே! ஒன்றை அடக்கினால் இன்னொன்று தலைதூக்குகிறதே! அந்த இன்னொன்றை அடக்கப்போனால் முதல் ஆசையே ‘நான் செத்தேனா பார்!’ என்று ‘ஸொரூபம்’ காட்டுகிறதே!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அகண்ட ஆனந்தம் மனத்துக்கு இல்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மரணத்தால் ஆசை அழியுமா?
Next