ஜீவன் முக்தர்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த நிஷ்டை கலைந்த பிறகும்கூட அவர்களின் உள்ளுக்குள்ளே அநுபவம் மாறாது. ‘நிஷ்டை கலைந்தது’ என்பது நம் பார்வையில்தான், நிஷ்டை கலைந்து அவர்கள் வெளி உணர்வோடிருப்பதாக நாம் நினைக்கும்போதுகூட அவர்கள் ஆத்மாவிலேயேதான் ஐக்யமாயிருப்பார்கள். மனஸின் பந்தமும் ஸம்ஸார பந்தமும் கர்மபந்தமும் துளிக்கூட இல்லாமல் இங்கேயே மோக்ஷம் அடைந்துவிட்ட ஜீவன் முக்தர்கள் என்று அவர்களைத்தான் சொல்வது. தூங்கிக்கொண்டே ஒரு குழந்தை தாய்ப்பால் சாப்பிடுகிறதல்லவா? இப்படி அவர்கள் உள்ளே ஸமாதி நிஷ்டையிலிருந்த கொண்டேதான் நமக்கு பஹிர் முகப்பட்டதுபோல (புறவுணர்வடைந்தது போலத்) தோன்றி வெளிலோகத்தில் ஸஞ்சாரம் செய்வது, ஸல்லாபம் செய்வது எல்லாமும். இந்த வெளி நாடகத்தில் அவர்கள் கோபப்படுகிறாற்போல, துக்கப்படுகிறாற்போல இருக்கும் ஸமயங்களிலும்கூட அவர்கள் வாஸ்தவத்தில் ஸதாநந்தமான ஆத்மாவிலேயே ஒன்று பட்டிருப்பவர்கள்தான்.

அந்த உள்ளநுபவத்தை சூன்யம் என்றும் பாழ் என்றும் நம் பார்வையிலிருந்து அந்த அநுபவிகளும்கூட சில ஸமயங்களில் சொல்வதுண்டு. உண்மையில் அது ஆனந்த பூரிதமான நிலையே.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ப்ரத்யக்ஷச் சான்றுகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'உடைய' அல்ல, உடையவரே !
Next