விடுவிப்பு ஈசனாலேயே : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதனாலேயே, இதிலிருந்து விடுவிக்கக் கூடியவனும் அவன்தான் என்று தெரிகிறது. இவன்தான் இழுத்துச் சேர்த்து வைத்தவன் என்றால், பிடுங்கிப் போடக்கூடியவனும் இவன்தானே?

மாய ப்ரக்ருதியில் ஒரு மநுஷ்யன் எப்படிப்பட்ட தன்மைகள் கொண்ட ஜீவனாக ஆக்கப்படுகிறானோ அதை அந்த ஜீவனுடைய ப்ரக்ருதி என்றே சொல்வார்கள். ப்ரக்ருதி என்றால் இங்கே இயற்கை என்று அர்த்தம் கொடுக்கிறது. வெளி உலகத்தில் இயற்கையன்னை என்பதெல்லாமும் ப்ரக்ருதிதான். எல்லாம் மாயை செய்த ஸ்ருஷ்டிதானே?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ப்ரஹ்மம் - ஆத்மா - ஈச்வரன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஜீவ - ஈச்வர வித்யாஸம்
Next