ஆத்ம ஞானமே ஆசா நாசம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆக, விஷயம் என்னவென்றால், ஈச்வராநுக்ரஹ ஸமாசாரம் எப்படிப் போனாலும், ஜீவன் செய்யவேண்டியது வைராக்ய அப்யாஸங்களால் மனஸை அடக்க முயலுவதே. இவ்வாறு அடக்கி நிறுத்தியபோதுதான் காமத்தை ஒருவன் அழிக்க முடியும். பலாத்காரமாக ஜீவனை பாபங்களில் செலுத்தி நரகத்தில் தள்ளும் சக்தி என்றும், பெருந்தீனி கேட்கிற மஹாபாபி என்றும் பகவான் முன்னே திட்டிய காமத்தை அழிப்பதற்கு இப்படி இந்த்ரிய- மனோ- புத்திகளை அடக்கி நிறுத்துவதுதான் வழி என்று சொல்லி முடிக்கிறார். அதாவது, ஜீவனுடைய தனி ஜீவத்வமே போய் அவன் அத்வைத ஆத்மாவானால்தான் ஆசை போகும்.

ஆசை போவது மட்டுமில்லை, ஜீவபாவமே போய் விடுகிறது என்பதால் அத்வைதமான மோக்ஷாநுபவமே கிடைத்துவிடுகிறது.

பாபத்தில் பிடித்துத் தள்ளும் சக்தி என்னவென்று அர்ஜுனன் கேட்டதற்கு, ‘ஆசை’ என்று பதில் சொல்லி அதை அடக்க வழி சொன்ன பகவான், இதன் மூலமாக மோக்ஷத்துக்கே வழி திறந்துவிடுகிறார். பின்னால் ஒரு இடத்தில் இதை ஸ்பஷ்டமாகவே தெரிவிக்கிறார். காம க்ரோதத்திலிருந்து விடுபட்டால் ப்ரஹ்ம நிர்வாணம் என்ற ஆத்மா ஸாக்ஷாத்கார மோக்ஷமே கிடைத்துவிடுகிறது என்று அங்கே தெளிவாகச் சொல்கிறார்.

காமக்ரோத வியுக்தாநாம் யதீநாம் யத சேதஸாம் |

அபிதோ ப்ரஹ்ம நிர்வாணம் வர்ததே விதித்தாத்மநாம் || 1

“காமக்ரோதத்திலிருந்து விடுபட்டு, சித்தத்தை அடக்கி, ஆத்மாவை அறிந்துகொண்ட துறவிகளுக்கு ப்ரஹ்ம நிர்வாணம் இரண்டிலும் கிடைகிறது ” என்கிறார். ‘அபிதோ’ என்றால் ‘இரண்டிலும்’.

“அதென்ன இரண்டிலும்?”


1கீதை 5.26

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஈஸ்வரனைப் பற்றி ஸ¨ஸனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  இகத்திலேயே மோக்ஷம்
Next