பலவற்றைக் குறிக்கும் த்வைதம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இன்னொன்று இல்லாமல் ஒன்று மட்டுமாயிருப்பது அத்வைதம். ஒன்று மட்டுமில்லாமல் இன்னும் பல இருப்பது த்வைதம். ஸரியாக வார்த்தைக்கு அர்த்தம் சொன்னால் ‘த்வைதம்’ என்றால் ‘இரண்டு’ ‘இருமை’ என்றுதான் அர்த்தம். – ‘பல’ என்று அர்த்தமில்லை. ‘பரமாத்மா என்று ஒன்று, ஜீவாத்மா என்று அதற்கு வேறாக இன்னொன்று. இப்படி இரண்டு இருப்பதுதான் ஸத்யம்’ என்பதே த்வைத ஸித்தாந்தம். இங்கே முழுக்க ஜீவாத்மாவைப் பற்றியேதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவனைப் பொறுத்தமட்டில், தேஹ- இந்த்ரிய-அந்தஃகரணங்களே ஜீவாத்மா என்று நினைக்கிறவரையில் அவனுக்கு வேறாக அவனுடைய அநுபவத்துக்கு வருபவையாக அநேக வெளி வஸ்துக்கள் இருக்கின்றன. இவனொன்று, வெளியிலே இன்னொன்று என்றில்லை. இவனொன்று, வெளியிலே பல. இப்படி இவனுக்கு வேறாக உள்ள எல்லாவற்றையுமே ‘த்வைத ப்ரபஞ்சம்’ என்று சொல்லிவிடுவது வழக்கம். அதிலே இரண்டுக்கு மேற்பட்ட பல பொருட்கள், அநேக சேதனா சேதனங்கள் இருந்தாலும், ‘ஜீவாத்மா’ என்று ஒருத்தன். ‘அவனுக்கு இரண்டாவதாக இந்த இத்தனையும்’ என்று வைத்து, த்வைத ப்ரப்ஞசம் என்று சொல்வதாக வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆசையின் அனர்த்தங்களில் பயமும் ஒன்று
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மனஸ் தனிப்பட்டு இராது
Next