ஈச்வரன் அல்லது ஸகுண ப்ரஹ்மம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அந்தக் காரண வஸ்து என்ன? அதுதான் மாயாசக்தி. ப்ரஹ்மத்தை இப்படிப் பலவான ஜீவர்களாகவும் ஜகத்தாகவும் காட்டிக்கொண்டிருக்கும் சக்தி.

தனக்கு அந்யமாக ஏதுவுமே இல்லாத, இருக்கமுடியாத வஸ்துவே ப்ரஹ்மமாதலால், இந்த மாயா சக்தியும் அதற்கு வேறாக இருக்க முடியாதுதான். அப்படியிருந்துவிட்டால் ப்ரஹ்மமே எல்லாவற்றுக்கும் மூலாதாரம் என்பது பொய்யாகிவிடும்! இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ப்ரஹ்மமே தான் மட்டுமாக எந்தத் தொடர்பும் இல்லாமிலிருப்பதோடுகூட, தன்னுடைய மாயாசக்தி என்பதான ஒன்றிடம் தொடர்பு கொண்டாற்போலவும் ஒருநிலை இருக்கிறது. தான் மட்டுமாகத் தனித்திருப்பதே நிர்குண ப்ரஹ்மம் என்பது. மாயையோடு கூடியிருக்கும்போது அதுவே ஸகுண ப்ரஹ்மம் எனப்படுகிறது. குணம் என்றால் ப்ரத்யேக லக்ஷணம். தனித்தன்மை என்பது, எந்த குணமும் இல்லாதது நிர்குணம் குணங்களுள்ளது ஸகுணம். ஈசவ்ரன் என்பது ஜகத் வ்யாபாரம் செய்கிற ஸகுண ப்ரஹ்மத்தைத் தான்.

ஒரே ஆத்மாவையே, ஜகத்தில் படைக்கப்பட்டு ஆட்டி வைக்கப்படுபவனாக இருக்கும்போது ஜீவாத்மா என்றும், அப்படிப் படைத்து ஆட்டிவைக்கிற ஸகுண ப்ரஹ்மமான ஈச்ரவனாக இருக்கும்போது பரமாத்மா என்று சொல்கிறோம்.

ஈச்வரனாக மாயாசக்தியுடன் கூடியுள்ளபோது (நிர்குண) ப்ரஹ்மம் ஜகத்தைக் கல்பிக்கிறது என்றால் அப்போது இந்த ஈச்வரனை மஹா மனஸ் என்று சொல்லலாம். அல்பமான ஜீவ மனஸ் இருக்கிறாற்போல, கார்யங்களை நடத்தி வைக்கிறாற்போல, ஈசர்வரனான பரமாத்மாவின் சிந்தனையிலேயே ஜகத் உண்டாகிறது. ஜக்த வ்யாபாரத்தை அவனே நடத்துகிறானென்றால் ‘மஹாமனஸ்’ என்று சொல்லலாம்தானே? எல்லா ஜிவ மனஸ்களுக்கும் மூலமான மஹா மனஸ் பரமாத்மா என்று சொல்லலாம். Cosmic Mind என்கிறார்களே, அது!

இந்த மனஸுக்கும் நம்முடைய ஜீவ மனஸுக்கும் உள்ள பெரிய வித்யாஸம் நம்முடைய மனஸுக்கு ஆத்மாவைத் தெரிய முடியாது. மனஸ் அழிந்தால்தான் ஆத்மா விளங்கும். ஆனால் ஈச்வரனோ மஹாமனஸாயிருந்து கொண்டே ஆத்மஞான ரூபியாகவும் இருப்பவன். முன்னேயே பார்த்த ஸமாசாரம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பரமாத்மா - ஜகத் காரணன், அந்தர்யாமி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வேதாந்த 'ஈச்வரன்' சிவனல்ல
Next