அன்பின் பல பெயர்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பக்தி என்பது ஈசனிடம் வைக்கும் அன்புதான்.

அன்புக்கே அது யாரைக் குறித்து வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வேறுவேறு பேர்கள் உண்டு. ஸம வயஸினரிடம் வைக்கும் அன்புக்கு ஸ்நேஹிதம், நட்பு என்று பேர். பெரியவர்களிடம் வைக்கிற அன்பு – மரியாதை. குழந்தையிடம் வைக்கும் அன்பு – வாத்ஸல்யம். கதாநாயகன் – நாயகி அன்பு கொள்வது ச்ருங்காரம். நம்மாதிரி ஸாதாரணப்பட்டவர்கள் நம்மைவிட தீனர்களிடமும் கஷ்டப்படுகிறவர்களிடமும் வைக்கும் அன்புக்குப் பரிவு என்று பெயர். அதுவே நம்மைவிட மஹா பெரியவர்கள் நம்மிடம் வைக்கும்போது அருள், க்ருபை என்றெல்லாம் பேர் எடுக்கிறது. வெறுமே பரிவாக ஒரு ஆறுதல் தருவதாக மட்டுமின்றி தீன நிலையை, கஷ்ட ஸ்தியைப் போக்கடிக்கும் சக்தியே மஹான்களின் அருளுக்கு இருக்கிறது. அதன் உச்சிதான் ஈச்வரன் நம்மிடம் வைக்கும் பரிவான அன்பு. பரமகருணை, அநுக்ரஹம் என்று அதற்குப் பேர் சொல்கிறோம். அந்த ஈச்வரனிடம் நாம் வைக்கிற உசந்த அன்புதான் பக்தி என்பது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நல்லதில் கெட்டது கலக்காமலிருக்க
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பக்தி - அன்பின் லக்ஷணம்
Next