ஜயந்திகளின் விசேஷம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஸெளரமானப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றும் தமிழ் தேசத்தவர்களுக்கு ஒரு பெரிய அத்ருஷ்டம் நம்முடைய ஆவணி மாஸமொன்றிலேயே பெரும்பாலும இந்த இருவரின் அவதார தினங்களான கோகுலாஷ்டமியும் பிள்ளையார் சதுர்த்தியும் வந்துவிடுகின்றன. மற்றவர்களுக்கு கோகுலாஷ்டமி ச்ராவண மாஸத்தில், விநாயக சதுர்த்தி பாத்ரபத மாஸத்தில் என்று இருக்கிறது.

ஆவணி மாஸத்தில்தான் வெள்ளரிக்காய் யதேஷ்டமாகக் காய்ப்பது. வெள்ளரிக்காயின் விசேஷம் என்ன என்றால் இது ஒன்றுதான் பழுக்காமல் காயாய் இருக்கும் போதே அப்படியே சமைக்காமல் ருசித்துச் சாப்பிடக்கூடய ஸாத்விகமான ஸ்வதேசக் காய்கறி. பிஞ்சுப் பிராய லீலைகளாலேயே மனஸைக் கொள்ளை கொள்ளும் க்ருஷ்ணர், பிள்ளையார் இரண்டு பேருக்கும் பொருத்தமாகப் பிஞ்சாகச் சாப்பிடக்கூடிய வெள்ளரி இவர்களுடைய ஜயந்தியில் நிறையக் காய்க்கிறது. நாமோ மனஸில் பழுத்துப் பக்வமாகாத காயாக இருப்பவர்கள். வெள்ளரிக்காய்களை இவர்களுடைய ஜனனோத்ஸவ பூஜையில் அர்ப்பணம் பண்ணி ப்ரஸாதமாகச் சாப்பிடவேண்டும். “நீங்கள் காயாக இருந்தாலும் உங்களையும் இந்த வெள்ளரிப்பிஞ்சு மாதிரி ருசியாக, குளிர்ச்சியாகச் செய்கிறோம்” என்று அந்த இரண்டு பேரும் அநுக்ரஹம் செய்வார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அபவாத நீக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  குரு, ஆசார்யார் வாத்தியார்
Next