போதனை ஜீவனோபாயமாக : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இம்மாதிரி, வருங்காலத்தில் வித்யை வாழ வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துக்காக இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காகப் பாடம் சொல்லித் தருபவர்தான் உபாத்யாயர் என்று அவரை ‘ஆசார்ய’ரிலிருந்து வித்யாஸப்படுத்தி மநுஸ்ம்ருதி சொல்லியிருக்கிறது. ஃபீஸுக்காகச் செய்கிற இவரை ‘ப்ருதக அத்யாபகர்’ – கூலிக்காக வேலை செய்பவர் – என்று சொல்லியிருக்கிறது. வேத வித்யையில் ஏதாவது ஒரு பகுதியை மட்டும் போதித்து அதற்காக இவர் சம்பளம் பெறுவார். (“ஏகதேசம் து வேதஸ்ய வேதாங்காந்யபிவா புந: | யோ (அ)த்யாபயதி வ்ருத்யர்த்தம் உபாத்யாய: ஸ உச்யதே ||“)

பழைய நாட்களில் இப்படி வ்ருத்யர்த்தம் (ஜீவனோபாயத்துக்காகவென்றே), வயிற்றுப் பிழைப்புக்கென்றே பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள் மிகவும் குறைவு. குருகுலங்கள் இந்தக் கொடுக்கல் வாங்கல் அசுத்தி படியாமல் நல்ல ஆசார்யர்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. ஆனாலும் இப்படிக் கூலிக்காக வேலை செய்கிறவர்களும் சில பேர் அப்போதே இருந்திருப்பதால்தான் தர்ம சாஸ்த்ரங்களிலேயே இவர்களைப் பற்றிய ப்ரஸ்தாவம் வந்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is உபாத்யாயரும் ஆசார்யரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  குரு - ஆசார்ய ஒற்றுமை - வேற்றுமை
Next