இரண்டு “குட்டி”கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கம்பன், காளிதாஸன் போல் ஜகத் ப்ரஸித்தமான கவிகள் தானென்றில்லை, இன்னம் அநேக கவிஞர்களும் ராஜாவுக்குக்கூட பயப்படாத தீரத்தோடு இருந்திருக்கிறார்கள். மஹாகவிகள் இரண்டு பேரைச் சொல்லி விட்டேன். குட்டிக் கவி, குட்டி சாஸ்த்ரி என்றே பேருள்ள இரண்டு பேரைப் பற்றி சொல்கிறேன்.

இவர்களில் முதலாமவரான குட்டிக் கவியின் நிஜப்பெயர் – ‘இயற்பெயர்’ என்பது – வாஞ்ச்யேச்வரன் என்பதாகும். அவருடைய முன்னோர்களின் ஊர் ஸ்ரீ வாஞ்சிய க்ஷேத்திரமானபடியால் அந்த க்ஷேத்ர மூர்த்தியின் பேரை அவருக்கு வைத்தார்கள். குழந்தையிலேயே அவருக்குக் கவிதா விலாஸம் ஏற்பட்டுவிட்டதால் ‘குட்டிக் கவி’ என்று பேர் ஏற்பட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கம்பரின் உயர் பண்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அரசனைப் போற்றும் கவிதை
Next