மைஸூர் மன்னருக்கு மறுதலிப்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மைஸூரிலிருந்தபோதுதான் குட்டி சாஸ்த்ரி ஸோமயாகம் செய்து யஜ்வா ஆனது. இதையறிந்த உடையார், “வாஜபேய யாகம் செய்கிறவருக்கு ராஜாவே குடைபிடிக்க வேண்டுமென்று இருக்கிறது. எனக்கு அந்த பாக்யத்தைத் தருவதற்காக தாங்கள் ஒரு வாஜபேயம் பண்ணவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் குட்டி சாஸ்த்ரிகள், “பாச்சாத்யார்கள் (மேல் நாட்டினர்) கையில் மாட்டிக்கொண்டு காலம் இருக்கிற இருப்பில் முறை தப்பாமல் யாகம் பண்ணுவது மிகவும் ச்ரமமாயிருக்கிறது. ப்ராமண தர்மத்ததுக்கு நான் இழைத்திருக்கக்கூடிய தவறுகளை நிவ்ருத்தி செய்துகொள்வதற்காகவே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இந்த ஒரு யாகம் பண்ணினேன். வாஜபேயம் பண்ணப்போய் என்ன அபசாரத்தைச் செய்யும்படி ஆகுமோ என்று பயப்படுகிறேன். ஸமூஹத்தில் இதைப் புரிஞ்சுக்கணும்” என்று மறுத்துவிட்டார். மரியாதையாகவே ஆனாலும், தீர்மானமாக மறுத்துவிட்டார்.

ராஜாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற பயமும் அவருக்கில்லை; வெண்கொற்றக்குடை வேந்தனே தமக்குக் குடை பிடிக்கத் தாம் அவப்ருத ஸ்நானத்துக்கு பவனி செல்லலாமே என்ற ஆசை, சபலமும் இல்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸ்நேஹத்திலும் சிறந்த சாஸ்த்ரியார்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'நம் பந்து'
Next