“நம் பந்து” : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

குட்டி சாஸ்த்ரிகள் நமக்கெல்லாம் பந்துவைப் போல. எப்படியென்றால் அவர், அவருடைய பிதா நரஸிம்ஹ சாஸ்த்ரி, பாட்டனார் மாதவ சாஸ்த்ரி ஆகிய எல்லோரும் நம் ஸ்ரீ மடத்து வித்வான்களாக இருந்திருப்பவர்கள். வாஜபேயத்தில் ராஜா பிடிக்கும் குடை வேண்டாமன்று சொன்ன அவர் தமது கொடையாக நம் மடத்துக்கு அனுப்பி வைத்த அலங்காரக் குடைகள் நிறைய உண்டு!

ஸ்வாதந்த்ரியம், ஸ்வய மரியாதை இவற்றோடு பிறர் மரியாதையைப் பேணுவது, பிறர் நலனைப் பேணுவது, அன்பு ஆகிய சிறந்த குணப்பண்புகளைக் கொண்ட கவிகளில் “மஹா” பட்டம் பெற்ற இரண்டு பேர் கதையும் ‘குட்டி’ பட்டம் பெற்ற இரண்டு பேர் கதையும் கேட்டீர்கள். இன்னம் இப்படி அநேகம் பேர் உண்டு. த்யாகையார்வாள் சொன்னாற்போல, “அந்தரிகி வந்தனமு“.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மைஸ¨ர் மன்னருக்கு மறுதலிப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அதுவும் ஓர் அழகு
Next