வில்லிப்புத்தூராரும் அருணகிரிநாதரும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கவிதைப் புலமைச் செருக்கில் ரொம்பவும் உக்ரமாகப் போனதை வில்லிப்புத்தூரார் கதையில் கேள்விப்படுகிறோம். புலவர்களையெல்லாம் வாதுக்குக் கூப்பிட்டு, அதிலே தோற்றுப் போனவர்களின் காதையே அவர் மிகவும் க்ரூரமாக அறுப்பது வழக்கம் என்று சொல்கிறார்கள். அருணகிரிநாதர்தான் அவரைக் ‘கந்தரந்தாதி’ பாடி ஜயித்தார். ஜயித்ததற்காக, அவர் மற்றவர்களைப் பண்ணின மாதிரி இவர் அவரைப் பண்ணாமல், அவருக்கு அடக்கம் வரும்படியாகவே உபதேசம் பண்ணி, விட்டுவிட்டார். அதனால்தான் ‘கருணைக்கு அருணகிரி’ என்று சொல்வது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கம்பரும் அவ்வையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நீலகண்டரும் மஹாதேவரும்
Next