அன்னை – தந்தை – ஆசான் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆசார்யான், (குரு என்கிற) பிதா, மாதா என்று இவர்களுக்குள்ளேயே முந்தியவரைவிடப் பிந்தியவர் உசத்தி என்று சில இடங்களில் சொல்லியிருந்தாலும், பொதுவான கருத்து என்ன என்றால், இந்த மூன்று பேரையுமே ஈச்வராம்சமாக பாவித்து மரியாதை செய்யவேண்டுமென்பதுதான். இதிலே மாதா பிதாக்களைவிட ஆசார்யனை உசத்திச் சொல்வதையும் சில தர்ம சாஸ்த்ர புஸ்தகங்களில் பார்க்கிறோம். மநுவேகூட, “ஒருத்தன் மாத்ரு பக்தியால் இந்த லோகத்தையும், பித்ரு பக்தியால் அந்தரிஷ லோகத்தையும், ஆசார்ய பக்தியால் ப்ரஹ்ம லோகத்தையும் அடைகிறான்” என்று சொல்லும்போது ஆசார்யனைத்தான் ரொம்பவும் சிறப்பித்திருக்கிறார்.

இவர்களுக்கு சுச்ரூஷை செய்யும் பலனை இப்படி உயர்த்தச் சொல்லியிருப்பது போலவே, இவர்களுக்குக் கொஞ்சம் த்ரோஹம் செய்துவிட்டாலுங்கூட மஹாபாபம் ஸம்பவிக்குமென்று எச்சரித்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வயதில் சிறிய குரு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'உபாத்யாயர்' பெற்ற உயர்வு
Next