சோதித்துத் துலக்குவது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பிரகாசம் ஜாஸ்தியாவதற்கே ஒரு மணியைக் கடைசல் பிடிக்கிற மாதிரி, மாணாக்கன் சோபிக்கவேண்டுமென்றே அந்நாள் குரு அவனை எவ்வளவோ சோதித்தார். பாடமே சொல்லித் தராமல் நீண்டகாலம் வேலை மட்டும் வாங்கி அவனைப் பணிவில் புடம் போட்ட ரிஷிகளும் உண்டு.

உதாரணமாக1 உபகோஸலன் என்று ஒரு சிஷ்யன். குருவின் பேர் ஜாபால ஸத்யகாமர். இவர் அந்தக்கால ‘ஸிலபஸ்’, ‘கர்ரிகுலம்’ இதுகளின்படி பன்னிரண்டு வருஷங்களில் அநேக சிஷ்யர்களுக்கு வேத சாஸ்த்ர சிக்ஷை கொடுத்தார். ஆனால் இந்த உபகோஸலன் என்கிற பையனை மட்டும் பாடம் கேட்க அநுமதிக்கவில்லை. பன்னிரண்டு வருஷமும் தம்முடைய அக்னிகளைக் கவனித்துக் கொள்கிற பொறுப்பிலேயே அவனை ஈடுபடுத்தியிருந்தார்2. அந்தப் பிள்ளையும் முணமுணக்கவில்லை. குருகுலத்தில் பன்னிரண்டு வருஷம் வஸித்தும் ஒரு பாடம்கூடக் கேட்காமல், அவர் சொன்ன கார்யத்தையே பண்ணிக் கொண்டிருந்தது.

அத்யயனம் பூர்த்தியானவுடன் ஸமாவர்த்தனம் என்று பிரம்மசாரிக்கு (சிஷ்யனுக்கு) ஒரு ஸம்ஸ்காரம் பண்ணி குருகுலத்திலிருந்து அகத்துக்குத் திருப்பி அனுப்புவார்களென்றும் அதற்கப்புறம் அவன் கல்யாணம் செய்து கொண்டு க்ருஹஸ்தாச்ரமம் ஏற்க வேண்டுமென்றும் சொன்னேனல்லவா? இந்த மாதிரி மற்றப் பசங்களுக்கு ஸத்யகாமர் ஸமாவர்த்தனமும் பண்ணிவிட்டார். உபகோஸலனை மட்டும் அப்படியே ignore (அலக்ஷ்யம்) பண்ணிவிட்டு – அல்லது பண்ணின மாதிரி!

அப்போதும் அந்தப் பிள்ளை பாட்டுக்குப் பொறுமையாகவே இருந்தது.


1இக்கதை சாந்தோக்ய உபநிஷத்தில் (4-10) உள்ளது.

2 வைதிகரின் மூன்று அக்னிகளைக் குறித்து இரண்டாம் பகுதியில் ‘கிருஹஸ்தாச்ரமம்’ என்ற உரையில் “அக்னி காரியங்கள்” என்ற உட்பிரிவில் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ச்ரத்தை; பரிப்ரச்னம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  குரு பத்னி
Next