ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள், ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் திருக்கண்மணி என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது.

- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
தமிழ் தேடல்
Search Site

தெய்வத்தின் குரல் ஆடியோ

Kanchi Mahaswamigal

ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்

நாடு முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கர மடக் கிளைகள் மற்றும் அவற்றின் விபரங்களைக் காணவும்.