ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்.
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் |