சௌரம்

சௌரம்
நவக்கிரகங்கள்

காலையில் சூரியன் உதித்து மாலையில் மறைகிறது. சந்திரன் குறிப்பிட்ட காலத்தில் உதித்து மறைகிறது. இது வளர்ந்து பின் தேய்கிறது. பல விதமான நக்ஷத்திரங்களும் கோள்களும் உதித்து மறைகின்றன. பகல் இரவாக மாறுகிறது. விடியற்காலை - சூரிய உதய நேரம், பருவகாலங்கள் என மாறி மாறி வருகின்றன.

கோடை இருக்கிறது. பின்பு குளிர்காலம் வருகின்றது. பனிகாலம், மழைகாலம் என்றும் வருகின்றது. குறிப்பிட்ட காலத்தில் தான் மழை பொழிகிறது. திடீரென்ற பூகம்பம் நாட்டையே உலுக்குகிறது. உஷ்ணம் அதிகரித்து மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகின்றது. வெள்ளம் நகரங்களையும் கிராமங்களையும் அழிக்கின்றது. குறிப்பிட்ட காலத்தில் மனிதன் இறக்கிறான். அதே சமயத்தில் அடுத்த வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு செயலும் ஏற்படுகிறது. கடவுளால் படைக்கப்பட்ட நவக்கிரகங்களின் செயல் இவையயாவும். காலத்தை கண்காணிப்பவர்களாக, உலகத்தை, அதில் வாழும் மக்களை, தனிப்பட்டவர்களை, உயிர் வாழும் உலகிலுள்ள எல்லா ஜீவன்களையும் கண்காணித்து பலன் அளிப்பவர்களாக இவைகள் செயல்படுகின்றனர், தன்னுடைய முந்தய, செயல்களுக்கு ஏற்ப ஜீவர்கட்கு ஸம்ஸ்காரங்கள் என அழைக்கப்படும் தகுதிகள் கிட்டுகின்றன. கடவுளால் உண்டாக்கப்பட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு தங்களுடைய வாழ்வினை தர்ம சாஸ்திரப் படி வாழ்ந்த ஜீவன்களின் செயலுக்கு ஏற்ப பிறவி ஏற்படுகிறது. ஆகையால் அழிக்கமுடியாத அடையாளமாக ஜீவன்களின் மீது பதிந்துள்ள இவற்றிற்கு கர்மா எனப் பெயர். ஸ்மிருதி, ஸ்ருதி, (வேதம், தர்ம சாஸ்திரம்) ஆகியவைக்கு ஏற்ப ஒவ்வொரு படைக்கப்பட்ட ஜீவனும் வாழ்க்கையை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வகுக்கப் பட்ட பாதையினின்றும் வழுவி வாழ்வதால் துன்பமும் கஷ்டமும் ஏற்படுகின்றன. இத்தகையவற்றிலிருந்து மீள கோள்களை வழிபட சொல்லப்பட்டுள்ளது மத நூல்களில். ஆகையால் நவக்கிரஹ சாந்தி, பூஜை, ஹோமம், ஜபம் போன்றவை அடிக்கடி மேற்கொள்ளப் படுகின்றன. நவக்கிரஹத்தில் உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு வடிவம், விண்வெளியிலும் உயிரினங்களிலும் அதன் தாக்கம் உள்ளது. இவையாவும் தனது சக்தியை சூரியனிடமிருந்து பெறுகின்றன. ஆண்டின் பல காலங்களில் இந்த கோள்கள் நமது சூரிய முறை படி தங்களுக்கு என நடமாட்டங்களையும் பல்வேறு வீடுகளில் தங்கும் தகுதியையும் பெற்றுள்ளன. இதனால் பல்வகையான அனுபவங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நமக்கு மட்டும் அல்ல நாடுகளுக்கும் கிட்டுகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கு என கோயில் எழுப்பப்பட்டிருப்பதிலிருந்து இந்த நவக்கிரகங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அறியலாம். இந்த கோயில்கள் திருவிடைமருதூரில் உள்ள மத்யார்ஜுனத்தில் மஹாலிங்கேஸ்வரருக்கு நவக்கிரஹ க்ஷேத்ரங்களாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த கோயில்கள் பின்வருமாறு:

1. சூரியனார் கோயில் - சூரியன்

2. திருவாரூர் - சந்திரன்

3. வைதீஸ்வரன் கோயில் - அங்காரகன்

4. திருவெண்காடு - புதன்

5. ஆலங்குடி - குரு

6. கஞ்சனூர் - சுக்ரன்

7. திருநள்ளார் - சனி

8. திருநாகேஸ்வரம் - ராகு

9. நாகநாதர் கோயில் - கேது .

ஒவ்வொரு கோயிலிலும் நவகிரஹ சன்னதி பக்தர்களின், நாட்டின் நலத்திற்காக உண்டு. ஒவ்வொரு குறிப்பிட்ட கோளின் எஜமானருக்கு என தனிக் கோயிலும் உண்டு. அவையாவன:
1. சந்திரன் - திருப்பதி,
2. செவ்வாய் - பழனி,
3. புதன் - மதுரை,
4. சுக்கிரன் - ஸ்ரீரங்கம்,
5. குரு - திருச்செந்தூர்,
6. ராகு, கேது - காளஹஸ்தி

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  -   நமது பாரம்பரியம்  is வைஷ்ணவம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  -   நமது பாரம்பரியம்  is  சாக்தம்
Next